Noதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது மகன்கள் மூலம் டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில், சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் 31,378 சதுர அடி அரசு நிலத்தை அபகரித்திருப்பதாக, அறப்போர் இயக்கம் நேற்று அறிக்கை வெளியிட்டது. மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் முதல் இதில் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வருக்கு இதுதொடர்பான ஆவணங்களை அறப்போர் இயக்கம் அனுப்பியிருக்கிறது.
