Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கன்னியாகுமரி: மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; மேயர் முன்னிலையில் மோதல்… நடந்தது என்ன? | clash busted infront of nagercoil mayor

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2024
in அரசியல் செய்திகள்
0
கன்னியாகுமரி: மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; மேயர் முன்னிலையில் மோதல்… நடந்தது என்ன? | clash busted infront of nagercoil mayor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே உள்ள ஞானம் ஊராட்சி பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் மின் மயானம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின் மயானம் அமைய உள்ள இடத்தை பார்வையிட சென்ற நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ் முன்னிலையில் சிலர் மோதிக்கொள்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க கிளை செயலாளர் ஜெகதீஷ், “ஞானம் ஊராட்சியில் காரியான்கோணம் பகுதியில் பத்து கோடி ரூபாய் செலவில் மின்சார சுடுகாடு அமைக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஞாலம் ஊராட்சியில் உள்ள 14 கிராமங்களுக்கும் சுடுகாடு, இடுகாடு வசதிகள் உள்ளன. காரியான்கோணம் பகுதியானது முக்கடல் அணை அருகே உள்ளது. இந்த பகுதி உயர்ந்த மண் திட்டு போன்ற பகுதியாகும். மின் மயானம் திட்டத்தின் பெயரில் சிலர் அங்குள்ள மண்ணை கொள்ளையடிக்க முயல்கின்றனர். எனவே அந்த பகுதியை பார்வையிட்டு மக்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என நாகர்கோவில் மேயர் மகேசிடம் ஊர்மக்கள் சார்பில் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

மேயர் முன்னிலையில் நடந்த மோதல்மேயர் முன்னிலையில் நடந்த மோதல்

மேயர் முன்னிலையில் நடந்த மோதல்

மேயர் அந்த இடத்துக்கு வந்த சமயத்தில் அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். வீடியோ எடுக்கக்கூடாது என தி.மு.க ஒன்றியச் செயலாளர் பிராங்கிளின் ஒருவர் மொபைல் போனை வாங்கிப் பறித்தார். இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் சிலர் சமாதானப்படுத்தினர். மேயரால் எந்த பிரச்னையும் இல்லை. ஒன்றியச் செயலாளர் பிராங்கிளின் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படுத்தினார். மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்” என்றார்.



.

Previous Post

90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்

Next Post

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In