அயோத்தி என்றதும் பாபர் மசூதி வழக்குதான் நினைவுக்கு வரும் அளவு, நீண்ட காலம் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலேயே இருந்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, தேர்தலைச் சந்திக்கும்போதெல்லாம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதுதான். நீண்டகாலம், அயோத்தியைச் சுற்றியே பல்வேறு அரசியல்கள் நடந்தன. பிரசார ஆயுதமாகப் பல தேர்தல்களில் வலம்வந்தது இந்த வழக்கு.
இந்த வழக்கில் நவம்பர் 9, 2019 அன்று, அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்தது.

மேலும், முஸ்லிம்களுக்கு வேறொரு இடத்தில் மசூதி கட்டுவதற்கு இடமளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது என்றாலும், தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட்டும் இருந்தார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் ஓய்வுபெறப்போகும் சந்திரசூட்டுக்கு மகாராஷ்டிரா மாநிலம் கெட் தாலுகாவில் உள்ள அவரின் சொந்த ஊரான கன்ஹெர்சர் கிராமத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “பாபர் மசூதி வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. எங்களிடம் அடிக்கடி இதுபோன்ற சிக்கலான வழக்குகள் வரும். ஆனால் அதற்கு நாங்கள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதில்லை.

