கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், “2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள்தான் உள்ளன.
இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு விட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் செமி ஃபைனல். 2026 சட்டமன்ற தேர்தல்தான் ஃபைனல் கேம். அதில் நாம் ஜெயிக்க வேண்டும். 234 தொகுதிகளில் 200-ல் திமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். 200 என்பது டார்கெட், இளைஞர் அணியினர் 200-ஐ தாண்டி திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்காக இளைஞர் அணி தீவிரமாக செயல்பட வேண்டும். உங்கள் ஆதரவு, அன்பால்தான் எனக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வந்துள்ளது என நம்புகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போது யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கு தெரியும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
