Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Canada-India: “ஆதாரத்தை இன்னும் கொடுக்கவில்லை..” – கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் பதில் | Sanjay Kumar Verma tells Canada didn’t provide evidence yet

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2024
in அரசியல் செய்திகள்
0
Canada-India: “ஆதாரத்தை இன்னும் கொடுக்கவில்லை..” – கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் பதில் | Sanjay Kumar Verma tells Canada didn’t provide evidence yet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வந்த இந்திய – கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, கடந்த வாரம் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக இன்னும் மோசமாகியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவு தலைவர் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னணியில் இந்தியா இருக்கிறது என்று கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா உயர் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியதிலிருந்து இந்தப் பிரச்னை தொடங்கியது. இந்த குற்றச்சாட்டை ஆரம்பத்திலிருந்தே இந்தியா மறுத்து வந்தது. ஆனால், கனடாவோ, நிஜ்ஜார் கொலைக்குப் பின்னால் கனடாவில் இருக்கும் தூதரகத்தின் உயரதிகாரி சஞ்சய் குமார் வர்மாதான் இருக்கிறார் என்று உறுதியாகக் குற்றம் சாட்டியது.

தொடர்ந்து இந்தியாவை குற்றம் சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோதொடர்ந்து இந்தியாவை குற்றம் சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

தொடர்ந்து இந்தியாவை குற்றம் சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான், கடந்த வாரம் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட கனடாவிலிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப்பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சஞ்சய் குமார் வர்மா அளித்த பேட்டியில், “எந்தவொரு கொலையாக இருந்தாலும், அது மிகவும் தவறு. நானும் அதைக் கடுமையாக எதிர்கிறேன். இதை இதற்கு முன்பு பல நேர்காணல்களில் கூறியுள்ளேன்.

நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தைக் கனடா இன்னும் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காகப் புனையப்பட்ட குற்றம். இந்தியா மீது ஜஸ்டின் குற்றம் சாட்டுவது எந்த ஆதாரத்தை வைத்தும் அல்ல… வெறும் உளவுத்துறை தகவல் அடிப்படையில்தான். நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக, கொலை குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கேட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் அதைச் சமர்ப்பிக்கவில்லை” என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

இணையம் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சோ்ப்பு: ஜம்முவில் பாக். உளவு அமைப்பு முயற்சி

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In