Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுமுகமாக தீர்க்கப்பட்ட பிரச்னை..ONEPLUS உடன் வணிக உறவை மீண்டும் தொடங்கிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2024
in அரசியல் செய்திகள்
1
சுமுகமாக தீர்க்கப்பட்ட பிரச்னை..ONEPLUS உடன் வணிக உறவை மீண்டும் தொடங்கிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ORA என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், ஒன்பிளஸ் உடனான வணிக உறவை அக்டோபர் 1 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் உடன் வணிக உறவு இணைப்பு

இதுதொடர்பாக தென்னிந்தியா ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் டி. எஸ். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,

“ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்குப் பிறகு, எங்கள் சங்கத்தை தற்காலிகமாக பாதித்த நிலுவையில் உள்ள பிரச்னைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது ஒரு புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்போடு முன்னேறுவதை எதிர்நோக்குகிறோம்

இந்த நேர்மறையான வளர்ச்சியுடன், நாடு முழுவதும் உள்ள ORA உறுப்பினர்கள் ஒன்பிளஸ் தயாரிப்புகளை வாங்குவதையும், விநியோகிப்பதையும் மீண்டும் தொடங்குவார்கள். வாடிக்கையாளர்கள் நம்பகமான சில்லறை வணிக நெட்வொர்க் மூலம் ஒன்பிளஸ் சாதனங்களை தொடர்ந்து அணுக முடியும் என்பதை உறுதிசெய்கிறார்கள்.

பண்டிகைக் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த மறுதொடக்கம், ORA உறுப்பினர்கள் ஒன்பிளஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் தயாரிப்புகளை, பண்டிகைக் கால விளம்பரங்களுடன் வழங்க அனுமதிக்கும் ஒரு சரியான நேரத்தில் வருகிறது.

இது ஒன்பிளஸில் நுகர்வோர், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் எங்கள் கூட்டாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று ORA நம்பிக்கை கொண்டுள்ளது

எங்கள் உறுப்பினர்கள் மற்றும் நாங்கள் சேவை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான சிறந்த விளைவுகளை உறுதி செய்வதற்காக ஒன்பிளஸ் உட்பட, எங்களது அனைத்து பார்னர்களுடனும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு ORA உறுதியாக உள்ளது.

இந்த கூட்டாண்மையின் எதிர்காலம் மற்றும் அது கொண்டு வரும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பிளஸ் கேட்ஜட்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

தீபாவளி விற்பனையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் இயர்பட்களை மலிவான விலையில் விற்பனை செய்கிறது. ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் நார்ட் 4, ஒன்பிளஸ் நார்ட் CE4, ஒன்பிளஸ் வாட்ச் 2, ஒன்பிளஸ் பேட் 2 போன்ற பல்வேறு ஒன்பிளஸ் கேட்ஜெட்களுக்கு பெரும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை தற்போது ரூ.55,999 விலையில் வாங்கலாம். இந்த போனில் ரூ.2 ஆயிரம் சிறப்பு கூப்பன் மற்றும் ரூ.7ஆயிரம் வங்கி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இதை வாங்கும் போது, ​​உங்களுக்கு ஒன்பிளஸ் பட் புரொ 3 இயர்பட்கள் இலவசமாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 4ஐ ரூ.25,999 என ஆரம்ப விலையில் வாங்கலாம். இதை வாங்கும் போது உடனடி வங்கி தள்ளுபடியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் நார்ட் CE4 போன் வாங்கினால், நார்ட் பட்ஸ் 2r என்னும் இயர் பட்டை இலவசமாகப் பெறலாம். இது தவிர, ரூ.2 ஆயிரம் தள்ளுபடியும், ரூ.1,500 வங்கி தள்ளுபடியும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் நார்ட் CE4 லைட் மாடல் விலை ரூ.16,999 என்ற அளவில் தொடங்குகிறது. இதனுடன், புல்லட் வயர்லெஸ் Z2 இயர்பேண்ட் இலவசமாகக் கிடைக்கிறது. இதுதவிர ரூ.1,000 சிறப்பு கூப்பன் மற்றும் உடனடி வங்கி தள்ளுபடி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் வாட்ச் 2 வகை ஸ்மார் வாட்ச் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்வாட்சை ரூ.19,999க்கு வாங்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டிலும் சிறந்த தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. இந்த டேப்லெட்டை தீபாவளி விற்பனையில் ரூ.40,999க்கு வாங்கலாம். இதை வாங்குவதன் மூலம் ரூ.7 ஆயிரம் வரை சேமிக்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது.

மேலே கொடுக்கப்பட்ட தள்ளுபடியில் மாற்றம் இருக்க வாய்ப்பு இருப்பதால் பொருள்களை வாங்குவதற்கு முன் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் தளத்தில் ஒரு முறை சரிபார்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

.

Previous Post

தொடரும் இரிடியம் மோசடிகள்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி..

Next Post

ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? – அதிகாரிகள் கூறுவது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? – அதிகாரிகள் கூறுவது என்ன?

ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? - அதிகாரிகள் கூறுவது என்ன?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️🖤🖤🫀🖤🖤🖤👺👺👺👺👺👺

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In