Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: `தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஷிண்டே தியாகம் செய்ய வேண்டும்’ – பாஜக கோரிக்கை | Chief Minister Shinde must make sacrifices in Maharashtra assembly polls: BJP demands

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2024
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிரா தேர்தல்: `தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஷிண்டே தியாகம் செய்ய வேண்டும்’ – பாஜக கோரிக்கை | Chief Minister Shinde must make sacrifices in Maharashtra assembly polls: BJP demands
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க கூட்டணிகள் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டுள்ளன. பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தொகுதி பங்கீட்டில் ஒருமித்தக் கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது சிவசேனா கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கேட்டு நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இது குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே அளித்த பேட்டியில், “‘தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சலுகை காட்டவேண்டும். பா.ஜ.க தேசிய கட்சி, அதோடு பா.ஜ.க-விற்கு தற்போது 105 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். எனவே வாரியங்களில் பா.ஜ.க-விற்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவது அவசியம். தொகுதி பங்கீட்டில் இருக்கும் சிக்கல் உடனே தீர்க்கப்படவேண்டும். இதன் மூலம் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடியும். பா.ஜ.க ஏற்கெனவே மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறது.

அக்கணக்கெடுப்பு அறிக்கை கட்சி தலைமையிடம் தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். சிவசேனாவுடன் சில தொகுதிகளை மாற்றிக்கொள்ள இருக்கிறோம்” என்றார். மத்திய அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் மும்பை வந்திருந்த போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் பதவியை பா.ஜ.க தியாகம் செய்ததை அமிஷ் ஷா ஏக்நாத் ஷிண்டேயிடம் சுட்டிக்காட்டினார். உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்த பிறகு பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராக பதவியேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

எனவே வரும் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 160 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. சிவசேனாவிற்கு தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொடுக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. முன்னதாக பா.ஜ.க கூட்டணி அரசு இரண்டரை ஆண்டில் செய்த சாதனைகள் குறித்த அறிக்கை புத்தகத்தை வெளியிட்டது. அதில் பா.ஜ.க கூட்டணியால்தான் மும்பையில் 3-வது மெட்ரோ ரயில் திட்டம் அமலுக்கு வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்து இருக்கிறது.



.

Previous Post

ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு!

Next Post

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 18 october 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 18 october 2024

இன்றைய ராசிபலன் - Today Rasi Palan - 18 october 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In