Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இனி எவ்வளவு மழை பெய்தாலும் கோவை பாலத்தில் பேருந்து சிக்காது – அசத்தல் ஐடியா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2024
in அரசியல் செய்திகள்
0
இனி எவ்வளவு மழை பெய்தாலும் கோவை பாலத்தில் பேருந்து சிக்காது – அசத்தல் ஐடியா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை  மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக  மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில், சாலைகளில் மழை நீர் தேங்கியது. சாய்பாபா காலனி – சிவானந்தா காலனி இடையே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் மழை நீரில் சிக்கின.

கோவை ரயில்வே பாலத்தில் சிக்கிய பேருந்து

தீயணைப்புத்துறை விரைந்து சென்று பேருந்துகளை மீட்டது. இந்தப் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. எப்போது மழை பெய்தாலும், அங்கு மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும்.

இந்நிலையில் மழை பெய்யும்போது, வாகன ஓட்டிகள் அந்த ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீரின் அளவை தெரிந்து கொள்ளும் வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் இரண்டு பக்கமும் எச்சரிக்கை கம்பம் நடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை கம்பம்

மழை பெய்யும்போது, கம்பத்தில் பச்சை நிறம் தெரிந்தால் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொள்ளலாம். அதுவே மஞ்சள் நிறம் தெரிந்தால் வாகனங்களை சற்று கவனமாக இயக்க வேண்டும். சிவப்பு நிறம் தெரிந்தால் வாகனங்கள் செல்லக்கூடாது.

மழை நீரின் அளவு சிவப்பு நிறத்துக்கு வரும்போது, காவல்துறையினர் உடனடியாக அங்கு போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள். இரண்டு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, தண்ணீரின் அளவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்போதே அந்த வழியில் செல்லாமல் இருப்பது நல்லது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எச்சரிக்கை கம்பம்

அதில் தண்ணீரின் அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தமுறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விரைவில் மற்ற மேம்பாலங்களிலும் இதுபோல எச்சரிக்கை கம்பம் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Chennai Rain: “மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் 30% மீதமிருக்கிறது” – முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்



.

Previous Post

நாட்டைவிட குடும்பமே முக்கியம்: பாட் கம்மின்ஸ் அதிரடி!

Next Post

அதிக மழைப் பொழிவு எங்கே? – முழு விவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிக மழைப் பொழிவு எங்கே? – முழு விவரம்!

அதிக மழைப் பொழிவு எங்கே? - முழு விவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In