Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியா Vs கனடா: தூதரக ரீதியில் மீண்டும் மோதல்… என்ன நடக்கிறது? |Why India And Canada Fight starts again?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2024
in அரசியல் செய்திகள்
0
இந்தியா Vs கனடா: தூதரக ரீதியில் மீண்டும் மோதல்… என்ன நடக்கிறது? |Why India And Canada Fight starts again?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் நடந்த ஒரு கொலை, இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையேயான நட்பில் பெரும் விரிசலை உண்டாக்கியிருக்கிறது. சில மாதங்களாக அடங்கியிருந்த இந்த மோதல் விவகாரம், தற்போது மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

என்ன பிரச்னை?

2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி அன்று, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியிலுள்ள குருத்துவாராவின் கார் பார்க்கிங்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியரான ஹர்தீப் சிங், `காலிஸ்தான் புலிப் படை” அமைப்பின் தலைவர் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாபின் ஜலந்தரிலுள்ள சிறு கிராமத்தில் பிறந்த ஹர்தீப், 1990-களின் மத்தியில் போலி பாஸ்பார்ட் மூலம் கனடாவை அடைந்ததாகத் தெரிகிறது. முதலில் அங்கு பிளம்பர் வேலை பார்த்தவர், பின்னர் குருத்துவாரா ஒன்றின் தலைவராக பணி செய்திருக்கிறார். தனி நாடு கேட்டுப் போராடும் காலிஸ்தான் அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்ட ஹர்தீப், வெகு விரைவில் கனடாவிலுள்ள சீக்கியர்கள் மத்தியில் பிரபலமானவராக உருவெடுத்திருக்கிறார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான, `சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டதால், ஹர்தீப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ). பஞ்சாப் காவல்துறையிலும் இவர்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் ஹர்தீப்பின் ஆதரவாளர்கள், `இந்திய அரசு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது’ என்று கூறிவந்தனர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

ஹர்தீப் கொலையும்… ட்ரூடோ குற்றச்சாட்டும்..!

இந்த நிலையில், ஹர்தீப்பின் கொலை குறித்து கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசின் ஏஜென்ட்டுகளுக்கு நம்பகமான தொடர்பிருப்பதாகக் கனடா உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. கனடா மண்ணில், கனடாவின் குடிமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் தொடர்பிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இது சுதந்திரமான, வெளிப்படையான ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணானது” என்று தெரிவித்தார்.

மேலும், ஜி-20 மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்தபோது, இந்த விஷயம் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும் ட்ரூடோ கூறியிருந்தார். இதையடுத்து, கனடாவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி பவன் குமார் ராயை, நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது கனடா அரசு.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை, “கனடா பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்றுகள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். கனடாவில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்வது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. கனடாவில், கொலை, மனிதக் கடத்தல், ஆர்கணைஸ்டு க்ரைம்களுக்கு இடமளிப்பது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்ற குற்றங்களுடன் இந்தியாவை தொடர்புப்படுத்துவதை முற்றிலும் நிராகரிக்கிறோம்” என்று கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இந்தியாவின் கனடா தூதரக அதிகாரி ஆலிவர் சில்வெர்ஸ்டரையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து, சில காலத்துக்கு கனடா மக்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்திவைத்தது இந்திய அரசு.



.

Previous Post

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

Next Post

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In