Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`நிவாரணம் வழங்குவதை அரசு ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும்!' – சொல்கிறார் வேல்முருகன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2024
in அரசியல் செய்திகள்
0
`நிவாரணம் வழங்குவதை அரசு ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும்!' – சொல்கிறார் வேல்முருகன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பஸ் நிலையம் முன்பு கடந்த 2018-ல் தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேல்முருகன்

இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸார் 247 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்-1ல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி அம்மாபேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். இதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு எங்கள் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் தடை வாங்கப்பட்டது.

ஆனால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டதால் நான் ஆஜர் ஆனேன். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பெய்த கனமழையில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார். கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. மனித உயிர் விலை மதிக்க முடியாதது. நிவாரணம் என்பது ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும். குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக் கூடாது. இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசால் தமிழ் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை” என்றார்.



.

Previous Post

TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வரை! டாப் 10 நியூஸ்!

Next Post

கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – துணை முதலமைச்சர் உதயநிதி!-tamil nadu deputy chief minister udayanidhi stalin press meet about chennai rain

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – துணை முதலமைச்சர் உதயநிதி!-tamil nadu deputy chief minister udayanidhi stalin press meet about chennai rain

கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி!-tamil nadu deputy chief minister udayanidhi stalin press meet about chennai rain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In