இதனால், `கார் பந்தயத்துக்கு மாதக் கணக்கில் முன்னேற்பாடுகள் செய்யும் அரசு, இவ்வளவு லட்சம் பேர் கூடுவார்கள் என்று முன்பே தெரிந்தும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதா” என பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதைத்தொடர்ந்து, விகடன் இணையதளப் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய முன்னேற்பாடுகள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டு, `சிறப்பாக இருந்தது, மோசமாக இருந்தது, ஓரளவு செய்யப்பட்டிருந்தது’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.


