உலகளாவிய பசி குறியீடு (Global Hunger Index)
அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைஃப் ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் 127 நாடுகளில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் Global Hunger Index அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு அடிப்படையில் பசியின் அளவை கணக்கிட மற்றும் கண்காணிக்க சர்வதேச மனிதாபிமான முகமைகளால் பயன்படுத்தப்படும் அளவீடு, உலகளாவிய பசி குறியீடு (Global Hunger Index).
கவலை பிரிவில் இந்தியா..
இந்த சர்வதேச ஆய்வில் வெளியிடப்பட்ட தகவலில், உலகளாவிய பட்டினி குறியீட்டில் 105-வது இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான 19 -வது உலகளாவிய பசி குறியீடு (GHI) அறிக்கையில் 127 நாடுகளுள் இந்தியா 105 வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிக மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற்ற நாடுகள் கடுமையான பசி, பட்டினி நெருக்கடியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த குறியீட்டில் இந்தியா 27.3 மதிப்பெண்களுடன் “தீவிரமான’ பசி பிரச்னைகள் கொண்ட 42 நாடுகளுள் ஒன்றாக ‘கவலைக்குரிய’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக அளவில் 36 நாடுகள் மட்டுமே ‘கவலை’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
