Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்கும் என முன்னாள் கிரிக்கெட்டர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் துபை மற்றும் ஷார்ஜாவில் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முதல் போடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டிகள் அக்டோபர் 20 வரை நடைபெற இருக்கின்றன. மேலும், துபை மற்றும் ஷார்ஜா மைதானங்கள் என மொத்தமாக 23 போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.

குரூப் ஏவில் ஆஸி. 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 2ஆம் இடத்தில் இந்தியா 4 புள்ளிகளுடன் இருக்கிறது.

கடைசியாக நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: வரலாறு படைத்த ஜானிக் சின்னர்..! இத்தாலியின் முதல் வீரர்!

இந்த வெற்றியுடன் ஆஸி. அணி டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 14 வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இந்தியா அரையிறுதிக்கு நுழைய வேண்டுமானால் 6 முறை சாம்பியனான ஆஸி.யை நாளை (அக்.13) நடைபெறும் போட்டியில் வீழ்த்தியாக வேண்டும்.

இது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியதாவது:

ஆஸி. வீழ்த்துவதற்கான திறமை இந்திய அணியிடம் இருக்கிறது. இருப்பினும் அரையிறுதிக்கான முக்கியமான போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் முன்னாள் சாம்பியனை சந்திப்பது சற்று சவாலான விஷயமாகவே இருக்கும். கடினமான சவாலாக இருந்தாலும் இந்திய அணி அழுதத்துக்கு உள்படாமல் விளையாடினால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்றார்.

கடந்தாண்டு அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.



.

Previous Post

Israel Iran War: அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை; பின்னணி என்ன? | Iran Warns Arab countries amid war against israel

Next Post

இந்தியாவிலேயே மிக நீளமான ரோப்வே இது தான் – சுற்றுப்பயணத்திற்கான விலை வெறும் ரூ.950! | Sikkim is the host to India’s longest ropeway – round trip ticket price is Rs.950

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவிலேயே மிக நீளமான ரோப்வே இது தான் – சுற்றுப்பயணத்திற்கான விலை வெறும் ரூ.950! | Sikkim is the host to India’s longest ropeway – round trip ticket price is Rs.950

இந்தியாவிலேயே மிக நீளமான ரோப்வே இது தான் - சுற்றுப்பயணத்திற்கான விலை வெறும் ரூ.950! | Sikkim is the host to India’s longest ropeway – round trip ticket price is Rs.950

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In