கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு தடம் புரண்ட மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578) பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதையொட்டி, முக்கிய ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: முக்கிய ரயில்கள் ரத்து! மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்!
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
-
இன்று(அக்.12) காலை 4 மணிக்கு, திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி மெமு (16111) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், புதுச்சேரியிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி மெமு ரயில்(16112) ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16204) ரயில் ரத்து.
-
மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயில் ரத்து.
