ஹிந்தியில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக அசத்தி வருபவர் அனுபம் கெர். 69 வயதாகும் இஅவ்ர் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
2022இல் வெளியான தி காஷ்மீா் ஃபைல்ஸ் மிகுந்த சர்சையை ஏற்படுத்தியது.
கங்கனா ரணாவத் இயக்கியுள்ள எமர்ஜென்சி படத்திலும் நடித்துள்ளார். தி சிக்னச்சர, விஜய் 69 என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதில் விஜய் 69 படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
நெட்பிளிக்ஸ், ஒய்ஆர்எஃப் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆகாஷ் ராய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுன்கி பாண்டே, மிஹிர் அகுஜா நடித்துள்ளார்கள்.
69 வயதான கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார்.
Zindagi ek race nahin hai. It’s a triathlon
Vijay 69 is out on 8 November, only on Netflix.#Vijay69OnNetflix pic.twitter.com/brs1ArbnVf— Netflix India (@NetflixIndia) October 11, 2024
நடிகர் விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தின் தற்காலிக தலைப்பு போலவே இருப்பதால் எக்ஸில் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்திக்கிறார்கள்.

