Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`3 வாரங்கள் ஆலோசித்து முடிவுசெய்தேன்’ – கேரள பாஜக-வில் இணைந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா! | sreelekha ips joins bjp in kerala

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2024
in அரசியல் செய்திகள்
0
`3 வாரங்கள் ஆலோசித்து முடிவுசெய்தேன்’
– கேரள பாஜக-வில் இணைந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா! | sreelekha ips joins bjp in kerala
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, முதல் பெண் டி.ஜி.பி என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆர்.ஸ்ரீலேகா. இவர் யூடியூப் சேனலில் பல வரலாற்றுக் கதைகளை பேசி வருகிறார். இதற்கிடையே ஓணம் பண்டிகையின் முக்கிய கதாபாத்திரமான மகாபலி சக்கரவர்த்தி குறித்து “பலிபதம்’ என்ற ஒரு நாவல் எழுதியுள்ளார். அதில் மகாபலி குறித்த தனது கருத்தை வெளிப்படுத்யி உள்ளார். அந்த கருத்து பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.ஸ்ரீலேகா வீட்டுக்கு கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் இன்று சென்றனர். சிறிது நேரம் அவரிடம் பா.ஜ.க நிர்வாகிகள் உரையாடினர். அதைத் தொடர்ந்து ஆர்.ஸ்ரீலேகா பா.ஜ.க-வில் இணைவதாக கே.சுரேந்திரன் அறிவித்தார். அவருக்கு சால்வை அணிவித்தும், தாமரை மலர்களை அளித்தும் பா.ஜ.க-வுக்கு வரவேற்றார் கே.சுரேந்திரன். மேலும் ஆர்.ஸ்ரீலேகா தனது செல்போனில் மிஸ்ட் கால் கொடுத்து பா.ஜ.க உறுப்பினராக இணைந்தார். இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீலேகா மிகச்சிறந்த ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாகச் செயல்பட்டார். அவர் டி.ஜி.பி-யாக இருந்தார், காவல்துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவந்தார். காவல்துறையில் பெண்களின் சமத்துவத்திற்காகவும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தவும், பெண் உரிமைகளுக்கு ஆதரவாக பல முடிவுகளை எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது அவர் மிகவும் அறியப்படக்கூடிய எழுத்தாளரும் ஆவார். அவர் மகாபலி குறித்து புதிய நாவல் எழுதியுள்ளார். அது நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.

ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்

ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்

சக்தி வழிபாடு நடந்துகொண்டிருக்கும் நவராத்திரி காலத்தில் வீர மங்கையான ஸ்ரீலேகாவை பா.ஜ.க-வில் வரவேற்பதிலும், அவரை உறுப்பினராக இணைப்பதையும் பெருமையாக கருதுகிறேன். ஹரியானாவிலும், ஜம்மு காஷ்மீரிலும் பா.ஜ.க நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இனி உள்ள நாள்களில் அவர் நாட்டுக்காகப் பணிசெய்ய உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்களையும் பார்த்து, நாட்டின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை உள்ளதால் ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். அவரது வரவை மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக கருதுகிறேன். அவரை முழு மனதோடு பா.ஜ.க-வில் வரவேற்கிறேன். அவரின் சேவையும், அவருடைய அனுபவமும் இந்த நாட்டிற்கு தேவை. அவரது வருகை பா.ஜ.க-வுக்கும் மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும்.



.

Previous Post

STALIN-க்கு சிக்கலாகும் Samsung தொழிலாளர்கள் ஸ்ட்ரைக், எதிராக மூவர் ‘கூட்டணி!’ | Elangovan Explains / Samsung Workers Strike Trouble for Stalin

Next Post

சென்னை கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடல்; உடைந்து அழுத முதல்வர் ஸ்டாலின்! | murasoli selvam passedaway for helth issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடல்; உடைந்து அழுத முதல்வர் ஸ்டாலின்! | murasoli selvam passedaway for helth issue

சென்னை கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடல்; உடைந்து அழுத முதல்வர் ஸ்டாலின்! | murasoli selvam passedaway for helth issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In