இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், சாபுமோன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன் 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அமிதாப் குறித்து நிறைய விஷயங்களை “வேட்டையன்’ பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பகிர்ந்திருந்தார்.
அமிதாப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியத் தொடங்கிய ரஜினி, ” ‘அந்தா கானூன்’ படத்தில் நான் நடித்ததற்கு காரணமே அமிதாப் பச்சன்தான். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இந்தி ரீமேக் அது. தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட்டான பிறகு இந்தியில் எடுத்தார்கள். அதில் நான் நடித்தால் நல்லா இருக்கும் என அமிதாப் பச்சன்தான் படக்குழுவிடம் சொல்லி இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் தயாரிப்பாளர் வந்து என்னை புக் செய்தார். அதில் அமிதாப் கெஸ்ட் ரோலில் நடித்தார். அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு அவரை ரொம்ப புடிச்சு இருந்தது. அவருக்கும் என்னை ரொம்ப புடிச்சு இருந்தது. அதன் பிறகு அவர் நடித்த படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடித்தேன். அதன் பிறகு ‘ஹம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். மூன்று படமுமே மிகப்பெரிய ஹிட்.
