இப்படத்தை போஸ் வெங்கட் இயக்க வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ராமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்துவிட்டு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

‘சார்’ படக்குழுவினரைப் பாராட்டி பேசிய பிறகு சீமானிடம், விஜய்யின் தவெக மாநாட்டிற்கு உங்களுக்கு அழைப்பு வந்ததா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “இந்த மாதிரி பேச்சுக்கள் எழுந்தப்போது ஒரு அண்ணனாக நான் அவருக்கு சொன்னது என்னவென்றால் யாரையும் அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் மாநாட்டில் தேவையில்லாத பிரச்னைகள் வரும்.