Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜிக்கு கட்-அவுட்; கருணாநிதிக்கு இல்லை; ஏன் தெரியுமா?” – ஹெச்.ராஜா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2024
in அரசியல் செய்திகள்
0
`மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜிக்கு கட்-அவுட்; கருணாநிதிக்கு இல்லை; ஏன் தெரியுமா?” – ஹெச்.ராஜா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்து சமுதாயத்தை சாதிகளால் பிளந்து, சிறுபான்மையினரை மதத்தால் இணைத்து தேர்தலில் வெற்றியை பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.

மூன்றாவது முறையாக ஹரியானாவில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதற்கு காரணம், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களும் அணுகுமுறையும் தான். பா.ஜ.க-வை ஹரியானா மக்கள் ஆதரவளித்து பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

ஹெச்.ராஜா

ஒரு அரசாங்கம் இப்படி எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கான ஒரு அடையாளமாக சென்னையில் நடந்த ஏர் ஷோ அமைந்தது. மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பலரின் வீட்டு கதவைத் தட்டி உள்ளனர். சுயநலத்திற்காகவும், விளையாட்டு அமைச்சரின் நண்பர்களுக்காகவும் கார் ரேஸ் நடத்தினார். அதற்கான முன்னேற்பாடுகளை அவர் நான்கு நாட்களாக சென்று பார்வையிட்டு வந்தார். ஆனால், தற்பொழுது துணை முதல்வர் ஆன பிறகு அவருடைய கடமையை மறந்து விட்டார். வருகின்ற 2026 தேர்தலில் தி.மு.க-விற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை பா.ஜ.க-விற்கு உண்டு.

சட்டம் 370 சரத்தை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். எனவே, எண்ணிக்கையின் அடிப்படையில் பா.ஜ.க தோல்வி அடைந்து விட்டதாக கூறக்கூடாது. பா.ஜ.க எப்பொழுதுமே பட்டியல் இன மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய கட்சி. தேர்தலில் திருமாவளவனின் வார்த்தையை கூறி வாக்கு சேகரித்த தி.மு.க சட்டமன்றத்தில் உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி வைத்தது. எனவே, திருமாவளவன் பேச்சுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தேன்.

ஹெச்.ராஜா

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது சரிதான். மது ஒழிப்பு மாநாடு என்பது ஒரு நாடகம். தி.மு.க – வி.சி.க-வின் கூட்டு நாடகம். மாநாடு முடிந்தவுடன் மது ஒழிப்பு முடிந்து விட்டது. மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவனின் நாற்காலிக்கு அருகில் அமர்ந்து இருந்தவர்கள் எல்லாரும் சாராய உற்பத்தி ஆலைகளின் உரிமையாளர்கள் தான்.

மதுவை கொண்டு வந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி பலர் குடிப்பதற்கு காரணமாக இருந்துள்ளார். எனவே, அவருடைய கட்டவுட்டை மாநாட்டில் திருமாவளவன் வைக்கவில்லை. அதற்கு பதிலாக ராஜாஜியின் கட்டவுட் வைத்ததற்கு காரணம் அவர் மது ஒழிப்பை முன்னிறுத்தி வைத்தவர் என்பதற்காக தான். இன்னும் மூன்று மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதில் சிரமம் ஏற்படும். கன்னியாகுமரி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்ததற்காக கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அவரை அ.தி.மு.க தலைமை நீக்கியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். தளவாய் சுந்தரத்தை நான் வரவேற்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

காஷ்மீர்: 2 ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!

Next Post

‘ரிஸ்க் எடுக்க துணிவு இருக்கா’- இன்று 5 பங்குகளை வாங்க பிரபல நிபுணர் பரிந்துரை-sumeet bagadia recommends five shares today breakout stocks to buy or sell

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ரிஸ்க் எடுக்க துணிவு இருக்கா’- இன்று 5 பங்குகளை வாங்க பிரபல நிபுணர் பரிந்துரை-sumeet bagadia recommends five shares today breakout stocks to buy or sell

‘ரிஸ்க் எடுக்க துணிவு இருக்கா’- இன்று 5 பங்குகளை வாங்க பிரபல நிபுணர் பரிந்துரை-sumeet bagadia recommends five shares today breakout stocks to buy or sell

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In