சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து இருக்கிறார். அப்போது சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்திருக்கிறார். “சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எதற்காக போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி 3 அமைச்சர்கள் சேர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தினோம். அதன் பிறகும் ஏன் போராட்டத்தை தொடர்கிறார்கள்? என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்.
முதலமைச்சர் நேரடியாக மக்கள் பக்கம் இருக்கிறார். சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையைப் பொறுத்தவரை நிறுவனம் தரப்பில், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம்தான் பேசுவோம் என கூறுகிறார்கள். சிஐடியு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தவிர அனைத்தையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கிறது.

சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த குடும்பத்திற்கு ஊதிய இழப்பு ஏற்படுகிறது. சிஐடியு அங்கீகாரம் கோர்ட்டில் இருந்து தீர்ப்பு வந்த பிறகு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும். தமிழக முதலமைச்சர் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று கவனத்தில் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
