தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது, தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை என பா.ஜ.க அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மீதான விமர்சனம், ஆளுநரின் அதிகாரம் மீதான குற்றச்சாட்டுகள் எனத் தொடர்ந்த சலசலப்பால் சட்டமன்றத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில்தான் இந்த சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

இதற்கிடையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த மெகபூபா முஃப்தி, சட்டமன்றத் தேர்தல் தொடங்கும் முன்பே “‘சட்டமன்றத் தேர்தலில் இனி நான் போட்டியிடப்போவதில்லை” என அறிவித்தார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து 81 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வெற்றிப்பெற்றாக வேண்டும் என தீவிர பிரசாரத்திலும் பங்கெடுத்தார். ஆனால், கடந்த தேர்தலில் 28 இடங்களில் வென்ற பி.டி.பி கட்சி, இந்த முறை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதியில் வென்றிருக்கிறது.
பி.டி.பி கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பதியில் கூட வெற்றிப்பெற முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. மெஹ்பூபா முஃப்தியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய பிஜ்பெஹாரா தொகுதியில், அவருடைய மகள் இல்திஜா முஃப்தி போட்டிட்டார். அந்தத் தொகுதியில் கூட பி.டி.பி கட்சி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த பெரும் சரிவுக்கு ஆரம்பத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததின் விளைவை பி.டி.பி கட்சி அறுவடை செய்திருக்கிறார் என ஒரு தரப்பும், பி.டி.பி கட்சியும், மெகபூபா முஃப்தியும் வாக்காளர்களுடனான தொடர்பை இழந்துவிட்டது போல் தெரிகிறது என இன்னொரு தரப்பும் கருத்து தெரிவித்துவருகிறது.
