Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரசுக்கு பாராட்டு – அரசுக்கு எதிராக போராட்டம்! தமிமுன் அன்சாரி கொண்டு வந்த மாறுபட்ட தீர்மானங்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள்
0
அரசுக்கு பாராட்டு – அரசுக்கு எதிராக போராட்டம்! தமிமுன் அன்சாரி கொண்டு வந்த மாறுபட்ட தீர்மானங்கள்!
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Thanjavur oi-Arsath Kan
Published: Saturday, June 24, 2023, 7:34 [IST]
தஞ்சை: ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை தாமதிப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக சிறை நிரப்பும் போரட்டம் நடத்துவது என தீர்மானம் கொண்டு வந்துள்ள தமிமுன் அன்சாரி, 500 டாஸ்மாக் கடைகளை மூடியதற்காக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு செயற்குழு தஞ்சையில் நடைபெற்ற நிலையில் அதில் NEXT மற்றும் NEET தேர்வு வேண்டாம், மணிப்பூர் அரசை கலைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு; 1. மணிப்பூர் அரசை கலைக்க வேண்டும்! கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் இயல்புநிலை பாதிக்கப்பட்டு கலவரம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.வன்முறைகளுக்கும், கலவரங்களுக்கும் ஒன்றிய மற்றும் அம்மாநில அரசுகளின் பொறுப்பற்ற போக்குகளே காரணம் என இக்கூட்டம் குற்றம் சாட்டுகிறது. எனவே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தவறிய அம்மாநில அரசை கலைக்க வேண்டும் என இக்கூட்டம் குடியரசு தலைவரை கேட்டுக்கொள்கிறது. 2. NEXT தேர்வு வேண்டாம்! கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படையும் வகையில் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NEXT தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை கடினமாக்குகிறது. மேலும் மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், NEXT தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. 3. NEET தேர்வை ரத்து செய்க! நீட் எனும் மருத்துவ கல்லூரிக்கான தகுதி தேர்வில் இவ்வாண்டு முதலிடம் பெற்ற 50 பேரில் 39 மாணவர்களின் பின்னணியை ஆய்வு செய்யும்போது, இத்தேர்வானது ஏழை மற்றும் கிராமப்புற மாணவ – மாணவிகளுக்கு எதிரானது என்பது மீண்டும் தெளிவாகி இருக்கிறது.எனவே இத்தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 4. பொதுசிவில் சட்டம் கூடாது! பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு ஒரு கருத்து கேட்பை பொது வெளியில் கேட்டிருக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்ட அரசியல் நாடகம் என்று இக்கூட்டம் குற்றம் சாட்டுவதுடன், இம்முயற்சியை குடியரசு தலைவர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. 5. ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை! தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து ஆயுள் சிறைவாசிகளாக வாடும் கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கிறது.மஜக தொடர்ந்து இதற்காக போராடி வருகிறது. ஆயினும் தமிழக அரசு நியாயமான இக்கோரிக்கையை தாமதிப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முத்தமிழ் அறிஞர் கலைஞர். மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி இக்கோரிக்கையை செயல்படுத்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.இதை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள – மத்திய சிறைகளின் முன்பு ‘சிறைநிரப்பும் போராட்டத்தை’ நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 6. தமிழக அரசுக்கு பாராட்டு! ஜூன் 22 முதல் 500 டாஸ்மாக்- சில்லறை மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவை இக்கூட்டம் வரவேற்று பாராட்டுவதுடன், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. 7. எதிர்கட்சிகள் கூட்டுக்கு பாராட்டு! இந்தியாவை கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் நாசப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதுடன், தவறான பொருளாதார கோட்பாடுகளையும் கையாண்டு நாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளனர். இந்நிலையில் நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்குடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களின் முன்முயற்சியில் (ஜூன் 23. 2023) பாட்னாவில் நடை பெறும் நாடு தழுவிய அளவிளான எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் வெற்றி பெற இக்கூட்டம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 8. ஒன்றிய அரசுக்கு கண்டனம்! வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு துறை ஆகிய தற்சார்பு அமைப்புகள் ஒன்றிய அரசால் அரசியல் காரணங்களுக்காக தவறாக வழிநடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. இவற்றை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு அதன் நீதி மற்றும் சுதந்திர செயல்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 9. மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக! சமீபத்தில் தமிழக அரசு வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வை அறிவித்திருப்பதை திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 10. செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை கைவிடுக ! பாரம்பர்ய விவசாயத்திற்கு மாற்றாக செயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் கட்டாயமாக வினியோகிப்பதை ஒன்றிய – மாநில அரசுகள் கைவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. விண்ணப்பிக்க ரெடியா 11. காவிரியில் உரிய பங்கை தர வேண்டும்! கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் விவசாய உற்பத்தி அதிகரித்தது. அதேபோல் நிகழாண்டும் குறுவை சாகுபடியை 2 லட்சம் ஏக்கர் அளவுக்கு உற்பத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Thamimun Ansari, who has brought a resolution to hold a jail filling protest against the government across Tamil Nadu, has also brought a resolution praising the government for closing down 500 Tasmac shops.
Story first published: Saturday, June 24, 2023, 7:34 [IST]

.

Previous Post

பாட்னாவில் தமிழர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Next Post

மாநகராட்சி ஆணையர் மீது புகார் – திண்டுக்கல், காஞ்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாநகராட்சி ஆணையர் மீது புகார் - திண்டுக்கல், காஞ்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

மாநகராட்சி ஆணையர் மீது புகார் - திண்டுக்கல், காஞ்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In