“ `புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்’ மீதுள்ள அன்பும், வியப்பும் இன்னும் அப்படியே இருக்கிறது” என்று ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பதிவில், “சென்னையில் நான் வளர்ந்ததின் ஒரு அங்கம் ‘புரட்சி தலைவர்’ எம்.ஜி.ஆர் மீது எனக்குள்ள அன்பும், மதிப்பும். அது இப்போதும் அப்படியே இருக்கிறது. 53-வது அதிமுக தொடக்க நாளான அக்டோபர் 17-ம் தேதிக்காக புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள் மற்றும் ரசிகர்களுக்கு என் நல்வாழ்த்துகள்.
நான் மயிலாப்பூரில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய தமிழ் ஆசிரியர் முதன்முறையாக எனக்கு புரட்சி தலைவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
My love & admiration to ‘Purachhi Thalaivar’ ,Thiru ‘MGR’ avargal has been an integral part of my upbringing in Chennai.And it still remains intact. My best wishes to all the ‘Purachhi Thalaivar’ worshippers, admirers and fans on the upcoming ‘AIADMK’s 53rd formation day on… pic.twitter.com/Ub6pd6gAtG
— Pawan Kalyan (@PawanKalyan) October 5, 2024
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.
என்ற திருக்குறளை கூறி, இதில் இருக்கும் அத்தனை குணங்களும் புரட்சி தலைவரிடம் உள்ளது என்று கூறினார்.
அவர் கொடை, இரக்க குணம், செங்கோன்மை, குடி காத்தல் என்ற நான்கு சிறப்புகளை கொண்ட வேந்தர்களுக்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவார்” என்று பதிவிட்டுள்ளார்.
பவன் கல்யாணிற்கு நன்றி தெரிவித்து, “சமத்துவம்-சமூகநீதி தழைக்க, சாதி-மதச்சார்பற்று அனைவரும் அனைத்தும் பெற, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம் அதிமுகவின் 53வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர் திரு. பவன்கல்யாண் அவர்களுக்கு நன்றி!” என்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
Thanks to Deputy Chief Minister
of Andhra Pradesh
Thiru. @PawanKalyan Avl,
on wishing for 53rd Foundation Day of Our party @AIADMKOfficial ,
Under my leadership , that strives to uphold the values of Equity, Social Justice and Secularism, and envisioned on a governance model… pic.twitter.com/cx8Re4hWJl— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 6, 2024

