சென்னை: ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.
அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#chennai festival special train
சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி இடையே 08,09- 10-2024 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்.. இயக்கம் pic.twitter.com/71FJ65tqQk— TamilNadu Train Usersதமிழ்நாடு ரயில் பயனர்கள் (@TrainUsers) October 4, 2024
வார இறுதி மற்றும் விழாக் கால கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி, மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.
