Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Shruthi: வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தையும், நிச்சயமான வரனை விபத்திலும் இழந்த ஸ்ருதிக்கு அரசு வேலை | Wayanad shruthi will get government job, says kerala CM

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2024
in அரசியல் செய்திகள்
0
Shruthi: வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தையும், நிச்சயமான வரனை விபத்திலும் இழந்த ஸ்ருதிக்கு அரசு வேலை | Wayanad shruthi will get government job, says kerala CM
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியது. அதில் இளம் பெண் ஸ்ருதி-யின்  மொத்த குடும்பமும் மண்ணில் புதைந்த சோகம் அரங்கேறியது. வெள்ளார்மல அரசு பள்ளி மொத்தமாக மண்ணில் புதைந்த நிலையில், அந்த பள்ளிக்கு அருகே வசித்துவந்த சிவண்ணனின் 9 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் ஸ்ருதி-யை தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து இறந்தனர். சிவண்ணன், அவரது மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா(19) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்துவந்தனர்.

பக்கத்துவீட்டில் சிவண்ணனின் சகோதரர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரும் வசித்துவந்தனர். 9 பேர் கொண்ட அவர்களது குடும்பத்தில் கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஸ்ருதி மட்டுமே உயிருடன் உள்ளார். ஸ்ருதிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ருதியின் குடும்பத்தினர் அனைவரும் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தனர்.

தனியாக நின்ற ஸ்ருதிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தது அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஜென்சன் மட்டுமே. குடும்பத்தினரும், வீடும், திருமணத்துக்காக வீட்டில் சேர்த்து வைத்த நகை, பணம் ஆகியவை நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனாலும் நிச்சயித்தபடி ஸ்ருதியை திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தார் ஜென்சன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதற்கிடையே கடந்த மாதம் ஜென்சனும், ஸ்ருதியும் காரில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் தனியார் பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜென்சன் மரணமடைந்தார். ஸ்ருதி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஸ்ருதியின் நிலையை எண்ணி கேரள மாநிலமே கண்ணீர் வடித்தது.

இந்த நிலையில் ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “வயநாடு நிலச்சரிவில் தாய், தந்தை இருவரையும் இழந்த 6 குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் வீதம் நிதி வழங்குவது எனவும், பெற்றோரில் ஒருவரை இழந்த 8 குழந்தக்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதமும் வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்புட்டுள்ளது. வயநாட்டில் வீடும், நிலமும் இழந்தவர்களை மறு குடியமர்த்த இடம் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது.



.

Previous Post

“புதிய கட்சி தொடக்கம் ஆரவாரமாக தான் இருக்கும்… அதுதான் த.வெ.க-விலும் நடக்கிறது!” – ஜி.கே.வாசன் | New party launch, this is what is happening in TVk – GK Vasan

Next Post

சேவைகள் துறையில் 10 மாதங்கள் காணாத வீழ்ச்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சேவைகள் துறையில் 10 மாதங்கள் காணாத வீழ்ச்சி

சேவைகள் துறையில் 10 மாதங்கள் காணாத வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In