இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய உயரதிகாரிகள் எக்ஸ் தளத்தில், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 50 இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர், மேலும் இந்த வார இறுதியில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதனிடையே மீனவர்கள் கைது விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
