நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணி குறித்து தெரிவித்த துணை தலைவர் நாகராஜ், “ஆரம்பம் முதலே பழங்குடியினத்தை சேர்ந்த நகர்மன்ற தலைவர் சிவகாமியை சக நகர மன்ற உறுப்பினர்கள் மரியாதை குறைவாக நடத்தி வருகிறார்கள். நகர்மன்ற உறுப்பினரும் தி.மு.க- வின் நெல்லியாளம் நகர செயலாளருமான சேகர் என்பவர் டெண்டர் விடும் தொகையில் இருந்து கட்சிக்கு 2% கமிஷன் மற்றும் மாவட்டச் செயலாளருக்கு என 3% கமிஷனை பகிரங்கமாக வாங்கி வருகிறார். ஒப்பந்ததாரர் ஒருவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தலைவர் மற்றும் எனக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை மன்ற உறுப்பினர்கள் முன் வைத்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்” என்றார்.
இது குறித்து பேசிய தலைவர் சிவகாமி, “நகராட்சியில் ஒதுக்கக்கூடிய மொத்த டெண்டர் பணிகளையும் உறுப்பினர் சேகர் மட்டுமே பினாமி பெயரில் எடுக்க வேண்டும் என்கிறார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து கையெழுத்து போட முடியாது என்ன சொன்னதால்தான் இது போன்ற குற்றச்சாட்டை எழுப்புகிறார். தி.மு.க நகர செயலாளர் சேகரின் அனைத்து ஊழல்களுக்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது” என்றார்.
நகராட்சி தலைவராக இருப்பவர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர், நகராட்சி தலைவர் குற்றம்சாட்டும் தரப்பு என அனைவருமே திமுக-வை சேர்ந்தவர்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
