Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ரகுபதியே கூறி விட்டார்… இனி ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார்” -ஹெச்.ராஜா | H.Raja speech about Stalin, Udhayanidhi & Thirumavalavan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in அரசியல் செய்திகள்
0
“ரகுபதியே கூறி விட்டார்… இனி ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார்” -ஹெச்.ராஜா | H.Raja speech about Stalin, Udhayanidhi & Thirumavalavan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோயில் புனரமைப்பு பணி: வெள்ளை அறிக்கை வேண்டும்…

கோயில் கட்டுமானங்கள் தரமற்ற முறையில் உள்ளது. அதனால்தான் பழனி கோபுரத்தின் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் புனரமைப்பு பணிகளில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் ஊழல் நடந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்வார் என்று ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அவர் கூறியிருந்தது போலவே செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றார். அதிலிருந்தாவது புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கக் கூடாது. தர்மம், நீதி, நியாயம், நீதிமன்றம் என்று எதையும் மதிக்காத தர்பார் ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர்

கல்லூரிகளில் போலியான ஆதார் கார்டுகளை கொடுத்து ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் முறைகேடாக பணியாற்றியது தெரியவந்துள்ளது. தற்போது பொன்முடி அந்தத் துறையின் அமைச்சராக இல்லாத சூழலில் முதலமைச்சர் முறையாக விசாரணை செய்து அது என்ன முறைகேடு நடந்தது என்று குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் கள ஆய்வு நடத்த வேண்டும்.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 15 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அந்தக் கட்சியை கொண்டு சென்ற பாதையில் தற்போது அதிமுக கட்சி செல்கிறதா..? என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருக்கலாம். அதனால், வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம். அந்த விவாதத்திற்குள் நாங்கள் செல்லவில்லை. எங்களுக்கு கிடைத்துள்ள 18 சதவிகித வாக்குகள் பிரதமர் மோடிக்காக கிடைத்த வாக்குகள்.

முதலமைச்சர் ஸ்டாலினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மூலவர் என கூறியது பற்றி கேட்கிறீர்கள். அவர் அப்படி சொல்லியுள்ளதால், இனிமேல் ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார். ஏனென்றால், ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியே கூறி விட்டார்” என்றார்.



.

Previous Post

வெட்கக்கேடானது! சமந்தாவை விமர்சித்த அமைச்சரை சாடிய நாக சைதன்யா!

Next Post

Tamilnadu News Live October 3, 2024: Today Gold Rate: மீண்டும் தலை சுற்ற வைத்த தங்கம் விலை.. இல்லத்தரசிகள் ஷாக் – இன்றைய நிலவரம் இதோ..!-today tamilnadu news latest updates october 3 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 3, 2024: Today Gold Rate: மீண்டும் தலை சுற்ற வைத்த தங்கம் விலை.. இல்லத்தரசிகள் ஷாக் – இன்றைய நிலவரம் இதோ..!-today tamilnadu news latest updates october 3 2024

Tamilnadu News Live October 3, 2024: Today Gold Rate: மீண்டும் தலை சுற்ற வைத்த தங்கம் விலை.. இல்லத்தரசிகள் ஷாக் - இன்றைய நிலவரம் இதோ..!-today tamilnadu news latest updates october 3 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In