புதிய அதிபரும் சீனாவுடனான உறவைத் தொடர்ந்தால் இலங்கையில் உள்ள இந்திய முதலீடுகள் பாதுகாப்பாக இருக்குமா?
இந்தியா, சீனா என்றில்லை, அனைத்து முதலீடுகளும் பாதுகாப்பாக இருக்கும்.
ஶ்ரீலங்கா நீண்ட காலமாக முக்கியக் கட்டமைப்புகளுக்கு வெளிநாடுகளிடம் முதலீடுகளைப் பெற்றுவருகிறது. நாங்கள் எப்போதும் அணிசேரா நாடாக இருந்துவருகிறோம். எங்களுக்கு ஃபேவரைட்ஸ் எதுவும் இல்லை.
இந்தியா எங்களுக்குச் சகோதரரைப் போல. நாம் ஒரே மக்கள், ஒரே வரலாற்றிலிருந்து வருகிறோம். ஆனால் நம் பிராந்திய அரசியலில் சீனாவும் ஒரு முக்கிய நண்பர்.
புதிய அதிபரின் அரசாங்கத்திலும் நாங்கள் அணிசேரா நாடாக எல்லாருடனும் நட்புடனும் இருப்போம் என நம்புகிறேன்.
