Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`பவன் கல்யாண் ஆந்திர மக்களுக்கு துரோகம் செய்கிறார்' – மாணிக்கம் தாகூர் தாக்கு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in அரசியல் செய்திகள்
0
`பவன் கல்யாண் ஆந்திர மக்களுக்கு துரோகம் செய்கிறார்' – மாணிக்கம் தாகூர் தாக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அக்டோபர் 2-ம் தேதியான இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி ஜயந்தி விழா மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாள் ஆகியவை அனுசரிக்கப்பட்டது. விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் காமராஜரின் உருவ சிலைக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி., சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பேசுகையில், “கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்திருப்பது பா.ஜ.க. அரசின் சதி.

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக உள்ள முதல்வர் சித்தராமையாவை அவமானப்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறையை வைத்து இப்படியொரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்வோம். பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பே நாட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. இந்த மாதிரியான பணபரிவர்த்தனைகளை மத்திய நிதி அமைச்சகம் கண்டுகொள்வதில்லை. எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்ற ஆய்வில் மட்டும் குறியாக செயல்படும் பா.ஜ.க., இதுபோன்ற சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதுபோல செயல்படுகிறது. தமிழகத்தில் மது என்பது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. மீண்டும் காங்கிரஸ் வந்தால் தமிழகத்தில் மது இருக்காது. அரசியல் வேறு, கட்சி கொள்கை ஈடுபாடு வேறு. மக்களை பொறுத்தவரை மது ஒழிப்பு, மாற்றம் என நினைத்து காங்கிரஸ் அரசியலின் வலிமையை புரிந்து கொள்ளும்போது மது ஒழிப்புவரும்.

மாணிக்கம் தாகூர்

மதுரை, விருதுநகர் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி இடையேயான ரயில்வே திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரயில்பாதை அமைப்பதற்கான நிதி ஒவ்வொரு ஆண்டுக்கும் 100 கோடி ரூபாய் என்ற வகையில் ஒதுக்கப்படுகிறது. ரயில்பாதை அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தித்தர தமிழக அரசு தயாராக இருந்தபோதும் அந்த திட்டத்துக்கான முழு நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசுவோம். மத்திய மோடி அரசு, தமிழகத்தின்‌ மீது பாராமுகமாக செயல்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதன் பிரதிபலிப்புதான் கல்விக்கான நிதி ஒதுக்கப்படாமல் ஆசிரியர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படாமலிருப்பது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலையை ரூ.45 உயர்த்தியதன் மூலம் மத்திய மோடி அரசு, சாமானியர் பையிலிருந்து பணத்தை எடுத்து பெரும் பணக்காரர்களிடம் கொடுக்கிறது. எந்த சட்டம் என்றாலும் நிறைவேற்றலாம் எனும் பா.ஜ.க வீரவசனம் எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே முடிந்துவிட்டது.

இனி அவர்கள் மக்கள் நலனுக்கு எதிரான எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. மீறிக் கொண்டு வந்தாலும் அது பாராளுமன்ற ஆய்வுக்குழுவின் பார்வைக்கே அனுப்பப்படும். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உண்டியல் பணம் மீதே கடந்த ஆட்சியில் கைவைக்கப்பட்டிருப்பதாக கூறுவது ஏற்கமுடியாது. அவர், பா.ஜ.க.வின் ஊதுகோலாக செயல்படுகிறார். பா.ஜ.க செய்ய நினைப்பதை பவன் கல்யாண் சொல்கிறார். மக்களுக்கு நலனுக்கு எதிரான மத அரசியல் கையிலெடுக்கிறார். இது ஆந்திர மக்களுக்கு அவர் செய்யும் துரோகம்” என்றார்.

`இலங்கையில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு 3 சிறந்த வாய்ப்புகள்’ – CS Chairman Dilshan Wirasekara



.

Previous Post

IAS Transfer: உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு முதல் மாற்றம்..யாருக்கு எந்த துறை – முழு விவரம்

Next Post

பிக் பாஸ் 8: எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்! – முழு விவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிக் பாஸ் 8: எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்! – முழு விவரம்!

பிக் பாஸ் 8: எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்! - முழு விவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In