Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பினராயி விஜயனுக்குக் குடைச்சல் கொடுக்கும் சி.பி.எம் ஆதரவு எம்.எல்.ஏ! – யார் இந்த பி.வி.அன்வர்? | Independent MLA P V Anwar criticizing Pinarayi vijayan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in அரசியல் செய்திகள்
0
பினராயி விஜயனுக்குக் குடைச்சல் கொடுக்கும் சி.பி.எம் ஆதரவு எம்.எல்.ஏ! – யார் இந்த பி.வி.அன்வர்? | Independent MLA P V Anwar criticizing Pinarayi vijayan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், நிலம்பூர் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பி.வி.அன்வர். காங்கிரஸ் பாரம்பர்ய குடும்பத்தைச் சேர்ந்த பி.வி.அன்வர், கடந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். சி.பி.எம் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த பி.வி.அன்வர் கடந்த சில வாரங்களாக முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அதிரடியாக பேசிவருகிறார். ஆரம்பத்தில் போலீஸ் ஏ.டி.ஜி.பி அஜித்குமார் அதிக சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை ரகசியமாக சந்தித்ததாகவும் குற்றம்சாட்டினார். அடுத்ததாக, முதல்வர் பினராயி விஜயனின் அரசியல் செயலாளர் சசி குறித்து விமர்சித்தார். உண்மை நிலவரங்கள் பற்றி முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு சசி கொண்டுசெல்வதில்லை என்றார். பி.வி.அன்வரின் செயல்பாடுகளை சி.பி.எம் விமர்சித்தது. ஆனாலும், பி.வி.அன்வர் தொடர்ச்சியாக பினராயி விஜயனை விமர்சித்து வருகிறார். கோழிக்கோடு மற்றும் நிலம்புரில் பொதுக்கூட்டங்களை நடத்தி பினராயி விஜயனுக்கு எதிராக பேசி வருகிறார். பி.வி.அன்வர் பேசும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக செல்வதும் பேசுபொருளாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் பி.என்.அன்வர் தெரிவித்துள்ளார்.

பி.வி.அன்வர் எம்.எல்.ஏபி.வி.அன்வர் எம்.எல்.ஏ

பி.வி.அன்வர் எம்.எல்.ஏ

இதற்கிடையே டெல்லியில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பி.வி.அன்வரின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து மலப்புறத்துக்கு வரும் ஹவாலா பணமும், கடத்தல் தங்கமும் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறியிருந்தார். முதல்வரின் கருத்துக்கு பி.வி.அன்வர் மட்டுமல்லாது மலப்புறம் மாவட்டத்தில் பலமாக உள்ள முஸ்லிம் லீக் கட்சியும் கண்டனம் தெரிவித்திருந்தது. மலப்புறத்தை முதல்வர் பினராயி விஜயன் அவமானப்படுத்தி விட்டதாக முஸ்லிம் லீக் கூறியிருந்தது.



.

Previous Post

ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது; பதிலடி கொடுக்கப்படும்! இஸ்ரேல் பிரதமர்

Next Post

Tamil Top 10 News: விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் வரை – டாப் 10 நியூஸ்-vck conference chennai corporation announcement and other top 10 news on 2nd october 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Top 10 News: விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் வரை – டாப் 10 நியூஸ்-vck conference chennai corporation announcement and other top 10 news on 2nd october 2024

Tamil Top 10 News: விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் வரை - டாப் 10 நியூஸ்-vck conference chennai corporation announcement and other top 10 news on 2nd october 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In