அதிலும் திமுகவின் மூத்த அமைச்சர்களுக்கெல்லாம் வழங்கப்படாத பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, துறைமுகங்கள் துறை ஆகியவை எ.வ.வேலுவுக்கும், மின்சாரம், மதுவிலக்குத்துறை ஆகியவை செந்தில் பாலாஜிக்கும், வருவாய்த்துறை சாத்தூர் இராமச்சந்திரனுக்கும், வீட்டுவசதி முத்துசாமிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை சேகர்பாபுவுக்கு வழங்கப் பட்டதன் மர்மம் என்ன? அவர்கள் தந்தைப் பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், கலைஞர் கருணாநிதியையும் விட கொள்கை குன்றங்கள் என்பதாலா, நிர்வாகப் புலிகள் என்பதாலா? கரப்சன், கமிசன், கலெக்சனில் சிறந்தவர்கள் என்பதாலும், அதில் தலைமைக்கு உரிய பங்கை தவறாமல் தந்து விடுவார்கள் என்பதாலும் தானே?
