பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா தம்பதியினர் மகிழ்ச்சி செய்தி ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சினேகனுக்கும், சின்னத்திரை நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த 2021 ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாக சின்னத்திரை நடிகை கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், அவர்,”நாங்க அப்பா அம்மா ஆகபோறோம். உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
