Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`துரைமுருகனை துணை முதலமைச்சராக்க வேண்டியது தானே?’ – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி! | Dindigul sreenivasan speech at madurai admk meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2024
in அரசியல் செய்திகள்
0
`துரைமுருகனை துணை முதலமைச்சராக்க வேண்டியது தானே?’ – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி! | Dindigul sreenivasan speech at madurai admk meeting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக வழங்கியதோ மடு அளவு, உயர்த்திய விலைவாசியோ மலை அளவு, ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் விலையை உயர்த்தி பல கோடி வருமானம் ஈட்டுகிறார்கள். திமுக-வால் மதுவை ஒழிக்க முடியாது. மீண்டும் செந்தில் பாலாஜியிடம்தான் இந்த துறை வரும், இன்னமும் விலையை உயர்த்துவார்கள்.

அறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காகவிற்கு சென்று வந்தபோது அந்த செலவு குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, தமிழக மக்களின் வரிப்பணத்தில் போகவில்லை, எம்.ஜி.ஆர்-தான் அத்தனை செலவையும் ஏற்றார் என்று கூறினார்

திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சீனிவாசன் 

திண்டுக்கல் சீனிவாசன் 

ஆனால், இன்றைக்கு மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் வெளிநாடு சென்று, அங்கு அந்த நாள் முதல் இந்த நாள் வரை என்று சிவாஜி பாடிய பாடலை பாடிக்கொண்டே சென்றார். நீங்கள் வெளிநாடு செல்லுங்கள், அதற்கு அரசு பணத்திலா செல்வது?

எம்.ஜி.ஆர் சினிமா தவிர்த்து மக்களுக்காக உழைத்து போராடினார். அதனால் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர்.  சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பித்து வருகிறார்கள். ஆனால், வெற்றிபெற்ற வரலாறு கிடையாது. சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தே போனியாகவில்லை.

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது, எங்கு பார்த்தாலும் போதை கலாசாரம் , ஊழல் ஆட்சியாக, குடும்ப ஆட்சியாக உள்ளதால் மக்கள் சூடம் ஏற்றி, இறைவா இந்த ஆட்சியை நீயே கேட்க வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு தனது மகனை துணை முதலமைச்சர் ஆக்கியுள்ளாரே ஏன் துரைமுருகனை ஆக்க வேண்டியது தானே? இன்றைக்கு உதயநிதியை துணை முதலமைச்சராக்க அனைவரும் ஜால்ரா போடுகிறார்கள். துணை முதலமைச்சர் பதவி என்ன உங்கள் வீட்டு சொத்தா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எனக்கு பொருளாளர் பதவி வழங்கி உள்ளார். ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை வழங்கி உள்ளார். தன்னுடைய குடும்பத்தினருக்கு இந்த பதவியை அவர் வழங்கவில்லை,

2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஆட்சிக்கு வருவார். இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பாமல் ஜால்ரா போட்டு வருகிறார்கள் இதையெல்லாம் மக்கள் பார்த்துதான் வருகிறார்கள்.” என்று பேசினார்.



.

Previous Post

‘மேவாட்’ கொள்ளைக் கும்பல் செயல்பட்டது எப்படி? – நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் தகவல்

Next Post

சமுதாய அமைப்பாளர் பணி: 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சமுதாய அமைப்பாளர் பணி: 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சமுதாய அமைப்பாளர் பணி: 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In