Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைமுறை கடந்த விசுவாசம்; ஸ்டாலின் கொடுத்த பரிசு – அமைச்சரவையில் கோவி.செழியன் டிக் ஆனது எப்படி? | kovi.chezhiyan in tamilnadu cabinet, how did he get that

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2024
in அரசியல் செய்திகள்
0
தலைமுறை கடந்த விசுவாசம்; ஸ்டாலின் கொடுத்த பரிசு – அமைச்சரவையில் கோவி.செழியன் டிக் ஆனது எப்படி? | kovi.chezhiyan in tamilnadu cabinet, how did he get that
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“அமைச்சராக பதவியேற்க ரெடியா இருங்க..”

செழியன் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது பலருக்கும் தெரியும். கருணாநிதி குறித்து ஆய்வு செய்து தான் அவர் முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சாற்றல் நிறைந்த செழியன் மீது ஸ்டாலினுக்கு எப்போதும் தனிப்பாசம் உண்டு. கட்சி மீதும் ஸ்டாலின் குடும்பத்தின் மீது அவர் வைத்த விசுவாசமே அதற்கான காரணம்.

2021 தேர்தலுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற திமுக மாநாட்டில் செழியனை கட்சிக் கொடி ஏற்ற வைத்து அவருக்கான முக்கியத்துவத்தை கொடுத்தார் ஸ்டாலின். அமைச்சர் ஆகி விட வேண்டும் என சத்தமில்லாமல் காய்நகர்த்திய செழியன், `உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது நான் அமைச்சராக பதவியேற்க வேண்டும் இது நடக்குமானு தெரியலை அப்படி நடந்தால் அது எனக்கான வரம்’ என முக்கிய நிர்வாகிகளிடத்தில் சொல்லியிருக்கிறாராம்.

கோவி.செழியன்கோவி.செழியன்

கோவி.செழியன்

இந்த தகவல் ஸ்டாலின், உதயநிதிக்கு சென்றுள்ளது. கோவி.செழியன் மனதுக்குள் வெளியில் சொல்ல முடியாத சில வருத்தங்களும் இருந்தன. என்னதான் நான் அரசு தலைமை கொறடாவாக இருந்தாலும் சமூக காரணங்களை காட்டி அவரின் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என அவ்வப்போது பேச்சுக்கள் எழும். இதுவும் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றுள்ளது. பொதுவாக தலைமை கழக பேச்சாளர்களாக இருப்பவர்களுக்கு கட்சியில் பெரிய வளர்ச்சி இருக்காது என்ற எண்ணம் நிலவுகிறது. இவற்றை உடைக்கவும் ஸ்டாலின் நினைத்தார். கல்வி, பண்பு, விசுவாசம் ஆகியவை கோவி.செழியனுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கு கூடுதல் பலத்தை கொடுக்க யோசிக்காமல் அவரை டிக் செய்து விட்டார் ஸ்டாலின்.

சமீபத்தில் கும்பகோணம் வந்த உதயநிதி, செழியனிடம் `அண்ணே, எங்கூட அமைச்சராக பதவியேற்க ரெடியா இருங்கனு’ சொன்னாராம். அப்பவே, தம்பினு, உதயநிதி கைகளை பற்றிக்கொண்ட செழியனிடம், தலைமுறைகள் கடந்து நீங்கள் காட்டும் பாசத்திற்கான பரிசு என்றாராம் உதயநிதி.

சீனியர்கள் பலர் இருக்க உண்மை, உழைப்பு இவை தான் என்னை அமைச்சர் ஆக்கியிருக்கிறது என்று நெகிழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கோவி.செழியன் உயர்கல்வித்துறையை கவனிக்க இருக்கிறார்” என்றனர்.



.

Previous Post

மகாராஷ்டிரா: நெருங்கும் தேர்தல்… ரூ.11200 கோடியில் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி! | PM Narendra Modi launched Rs.11200 crore projects in Maharashtra

Next Post

Udhayanidhi Stalin: `பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி!' | புகைப்படத் தொகுப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Udhayanidhi Stalin: `பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி!' | புகைப்படத் தொகுப்பு

Udhayanidhi Stalin: `பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி!' | புகைப்படத் தொகுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In