Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Senthil Balaji: 'அன்று துரோகி, இன்று தியாகியா?' – திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in அரசியல் செய்திகள்
0
Senthil Balaji: 'அன்று துரோகி, இன்று தியாகியா?' – திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர இருக்கிறார்.

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

Senthil Balaji: `ஆருயிர் சகோதரரே… உன் தியாகம் பெரிது; உறுதி அதனினும் பெரிது’ – முதல்வர் ஸ்டாலின்

ஒரு பக்கம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியிருப்பதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மறுபக்கம் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. “முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை” என விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தள பதிவில்,

“1.செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்… எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?

2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்… தியாகி என்று கூறுவதற்கு?

3.INDI கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல…

4. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடுமன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக…

5. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை, சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்…

6. 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது, பலமுறை வழக்காடுமன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால். மத்திய அரசினால் அல்ல…

7. எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார்… எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு…

ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை….” என்றிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Senthil Balaji: `செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா?’ வழக்கறிஞர் சொன்னதென்ன?!



.

Previous Post

`300 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன்; நான் சொல்றத கேளுன்னார் அந்த நடிகர்’ – Rabi Bernard

Next Post

பாஜக தலைவரின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கு; சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்திற்கு 15 நாள் சிறை | Shiv Sena MP Sanjay Raut in defamation case filed by BJP leader’s wife

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக தலைவரின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கு; சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்திற்கு 15 நாள் சிறை | Shiv Sena MP Sanjay Raut in defamation case filed by BJP leader’s wife

பாஜக தலைவரின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கு; சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்திற்கு 15 நாள் சிறை | Shiv Sena MP Sanjay Raut in defamation case filed by BJP leader's wife

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In