Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

21ம் நூற்றாண்டில் மிக முக்கியம்! இந்தியாவை புகழ்ந்த பைடன்! உற்றுப்பார்த்த மோடி! திரும்பும் நாடுகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள்
0
21ம் நூற்றாண்டில் மிக முக்கியம்! இந்தியாவை புகழ்ந்த பைடன்! உற்றுப்பார்த்த மோடி! திரும்பும் நாடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

International oi-Nantha Kumar R
Updated: Thursday, June 22, 2023, 22:56 [IST]
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு இன்று பிரதமர் மோடி சென்ற நிலையில் அவரை ஜோபைடன் உற்சாகமாக வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடி மேடையில் நிற்க இந்தியா பற்றி ஜோபைடன் புகழ்ந்து பேசி உலக நாடுகளை திரும்ப வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நேற்று நியூயார்க்கில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து இன்று வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். அதன்படி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்பது அமெரிக்க அதிபர் ஜோபைடனை பிரதமர் மோடி சந்திப்பதாகும். இதற்காக இன்று பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் உள்ளிட்டவர்கள் கைக்குலுக்கி வரவேற்றனர். இந்த வேளையில் அங்கு இருந்தவர்கள் பாரத் மாதாகீ ஜே என கோஷமிட்டு அதிர வைத்தனர்.இதையடுத்து அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகளை ஜோபைடன், பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஜோபைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெள்ளை மாளிகை வளாகத்தில் இருநாடுகளின் உறவு பற்றி மேடையில் பேசினார். பிரதமர் மோடி மேடையின் அருகே நிற்க, மைக்கில் ஜோ பைடன் இந்தியா பற்றி பெருமையாக பல்வேறு விஷயங்களை கூறினார். இதனை பிரதமர் மோடி உற்று கவனித்து இருந்தார். இந்த வேளயைில் ஜோ பைடன் கூறியதாவது: அமெரிக்கா-இந்தியா ஆகிய இருநாடுகளின் உறவு என்பது 21ம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக குவாட் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் ஆதரவுடன் பலப்படுத்தி உள்ளோம். குவாட் அமைப்பின் பலத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. உலகில் வறுமையை அடியோடு விரட்டுவது, சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கைகோர்த்து செயல்பட்டு வருகிறோம். மேலும் உக்ரைன் -ரஷ்யா போரால் உணவு, எரிசக்தி பாதுகாப்பில் இருநாடுகளும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம். மேலும் சட்டத்தின்படியான சமத்துவம், கருத்து சுதந்திரம், மத பன்முகத்தன்மை உள்ளிட்ட அடிப்படை கொள்கைகள் நம் நாடுகளின் வரலாற்றில் சவால்களை எதிர்கொண்டு வந்திருந்தாலும் கூட அவை நிலைத்து நிற்கின்றன” என பெருமையாக கூறினார். ‛பாரத் மாதா கீ ஜெ’.. வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி! உற்சாகமாக வரவேற்ற ஜோபைடன்! ஆமா அந்த லேடி யாரு
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
When Prime Minister Modi visited the US President’s White House today, he was enthusiastically received by Jobaidan. After this, Prime Minister Modi stood on the platform and praised Jobi about India and made the countries of the world come back.

.

Previous Post

சென்னை | சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் வணிகம்

Next Post

விஜய் மக்கள் இயக்கம் உருவான கதை! Actor Vijay | Vijay Makkal Iyakkam

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய் மக்கள் இயக்கம் உருவான கதை! Actor Vijay | Vijay Makkal Iyakkam

விஜய் மக்கள் இயக்கம் உருவான கதை! Actor Vijay | Vijay Makkal Iyakkam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In