Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செந்தில் பாலாஜி : `செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சியங்களை கலைத்துவிடக் கூடாது!' – வானதி சீனிவாசன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2024
in அரசியல் செய்திகள்
0
செந்தில் பாலாஜி : `செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சியங்களை கலைத்துவிடக் கூடாது!' – வானதி சீனிவாசன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து வானதி சீனிவாசன் பேசியிருக்கிறார்.

அமலாக்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உட்பட திமுக-வைச் சேர்ந்த பலரும் செந்தில் பாலாஜி குறித்து பேசி வருகின்றனர். செந்தில் பாலாஜி ஊரில் அவரது தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் செந்தில் பாலாஜி குறித்து பேசியிருக்கிறார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து பேசிய வானதி சீனிவாசன், “திமுக அரசு, அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலஜியின் வழக்கை நீர்த்து போக செய்ய கூடாது. செந்தில் பாலாஜி அதிமுக-வில் இருக்கும் போது அவர் செய்த குற்றங்களை முன்வைத்தவரே இப்போது உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தான். மக்கள் அதனை மறக்க மாட்டர்கள். செந்தில் பாலாஜி தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை கலைத்து விடக்கூடாது.

இந்த விவகாரத்தில் முதல்வர் கவனமாக இருக்க வேண்டும். சவுக்கு சங்கர் ஒரு காலத்தில் திமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்னர் எதிராக பேசும் போது அவரை குண்டாஸில் அடைக்கிறார்கள். கருத்து சுதந்திரம் பற்றி பேசக்கூடிய திமுக-வினவரே கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்.

வானதி சீனிவாசன்

மத்திய அரசைப் பொறுத்தவரைக் கடந்த பத்து ஆண்டுகளாக எந்த ஒரு அமைச்சர் மீதும், எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் நேர்மையான ஒரு அரசாங்கத்தை மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது திமுக அமைச்சரவையில் எத்தனைக் குற்றச்சாட்டுகள், விசாரணைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதை மக்களுக்கு நாங்கள் ஞபாகப்படுத்த விரும்புகின்றோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Senthil Balaji: ‘470 நாள்கள் கழித்து ஜாமீன்; முடிவுக்கு வரும் சிறைவாசம்’ – வழக்கு கடந்து வந்த பாதை



.

Previous Post

மைக்ரோசாப்ட் மீது கூகுள் புகார்: கிளவுட் நடைமுறைகளால் அதிருப்தி-google files complaint against microsoft unhappy over cloud practices

Next Post

வேட்டையன் டிரைலர் எப்போது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேட்டையன் டிரைலர் எப்போது?

வேட்டையன் டிரைலர் எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In