Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

JVP இடதுசாரி கட்சியா? இலங்கைத் தமிழர் பிரச்னையில் அநுர குமார திசாநாயக்க நிலைப்பாடு என்ன? – அலசல் | What is President Anurakumar Dissanayake’s position on the Sri Lankan Tamil issue?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2024
in அரசியல் செய்திகள்
0
JVP இடதுசாரி கட்சியா? இலங்கைத் தமிழர் பிரச்னையில் அநுர குமார திசாநாயக்க நிலைப்பாடு என்ன? – அலசல் | What is President Anurakumar Dissanayake’s position on the Sri Lankan Tamil issue?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதேபோல, இலங்கை அதிபர் தேர்தல் களத்தில் தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய அரியநேத்திரன், “அநுர குமார திசாநாயக்கவைப்பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. ஒன்றுபட்டிருந்த வடக்கு கிழக்கை இரண்டாகப் பிரித்த கட்சியைச் சேர்ந்தவர். அதேபோல, அவருடைய தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்கக்கூடிய விஷயங்களும் இல்லை!” என்று குற்றம்சாட்டினார். ஜே.வி.பியின் கடந்த கால வரலாற்றையும், அரசியல் நிலைப்பாட்டையும் கருத்தில்கொண்டுதான் தமிழ் அரசியல் கட்சியினர் பெரும்பாலானோர் ஜே.வி.பியுடன் கூட்டணிக்கு செல்லவில்லை. பல தமிழ்த் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அரியநேந்திரனையே ஆதரித்தனரே தவிர அநுர குமார திசாநாயக்கவை தேர்தலில் ஆதரிக்கவில்லை.

அனுகுமார திசநாயக்க அனுகுமார திசநாயக்க

அனுகுமார திசநாயக்க

இந்தநிலையில், சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அநுர குமார திசாநாயக்க இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஓர் அதிபராக இலங்கை நாட்டு பூர்வகுடி மக்களான தமிழர்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பளிக்கக்கூடிய பொறுப்பில் இருப்பதால் அவர்மீதான எதிர்பார்ப்பும் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. இதுகுறித்து இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் புதிய அதிபராக பதவியேற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

சிவஞானம் சிறீதரன் . எம்.பி சிவஞானம் சிறீதரன் . எம்.பி

சிவஞானம் சிறீதரன் . எம்.பி

குறிப்பாக, தமிழ் எம்.பி. சிவஞானம் சிறீதரன், “தென்னிலங்கை மக்களைப் போலவே, கடந்த எழுபது ஆண்டுகால ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து விடுபட்டு இறைமையுள்ள இனமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் தங்களின் ஆட்சிக்காலத்திலேனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்தமிழர்களிடையே நிறைந்திருக்கிறது. விசேடமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியுணர்ந்த சக பிரஜையாகவும், எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய அரச தலைவராகவும் செயலாற்றும் வகையில் தங்கள் தலைமையிலான ஆட்சிபீடம் கட்டமைக்கப்படுமாயின், அதுவே இந்த நாட்டின் சுபீட்சத்துக்கான அடித்தளமாக அமையும். நாட்டின் அரசியல், பொருளாதார தளம்பல் நிலைகளை சமன் செய்வதிலுள்ள சவால்களை எதிர்கொண்டு செயலாற்றத் தயாராவதைப் போன்று, ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உணர்ந்த மக்கள் தலைவராக, இனவாதமற்ற இலங்கைத் தீவை உருவாக்கும் அரசியல் கூருணர்வு மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம், ஈழத்தமிழர்களின் அடிப்படை உரித்துகளை உறுதிசெய்யும் வகையில் தங்களின் ஆட்சி மலரும் என்ற எதிர்பார்ப்போடு, தங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்!” என்றிருக்கிறார்.

அரியநேந்திரன், தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கியவர் அரியநேந்திரன், தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கியவர்

அரியநேந்திரன், தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கியவர்

அதேபோல, தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய அரியநேந்திரனின் தமிழ் மக்கள் பொது சபை, “தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால்தான் இலங்கைத் தீவின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம்!” என புதிய அதிபருக்கு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடந்த காலத்தில் நடந்ததைப் போல இந்திய எதிர்ப்பு, சிங்கள் – பௌத்த மேலாதிக்க ஆதரவு, இனவாத கருத்துக்களையெல்லாம் கைவிட்டு, ஜே.வி.வி தலைவராக இல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை தீவின் அதிபராக இருந்து தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து, இலங்கையை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவேண்டும் என்பதே அநுர குமார திசாநாயக்க மீதான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.!

எனினும் அநுர குமார திசாநாயக்க நடவடிக்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY



.

Previous Post

Tamilnadu News Live September 26, 2024: HBD Periyasaamy Thooran: தமிழில் முதன்முதலாக பத்து தொகுதிகளில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் கொண்டு வந்த கவிஞர்-today tamilnadu news latest updates september 26 2024

Next Post

HBD Periyasaamy Thooran: தமிழில் முதன்முதலாக பத்து தொகுதிகளில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் கொண்டு வந்த கவிஞர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 26, 2024: HBD Periyasaamy Thooran: தமிழில் முதன்முதலாக பத்து தொகுதிகளில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் கொண்டு வந்த கவிஞர்-today tamilnadu news latest updates september 26 2024

HBD Periyasaamy Thooran: தமிழில் முதன்முதலாக பத்து தொகுதிகளில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் கொண்டு வந்த கவிஞர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In