இந்த நிலையில், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “மதுவிலக்கு வேண்டும் என்பதில் தி.மு.க-வுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். ஏற்கனவே 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனவே முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மதுக்கடைகள் மூடப்படும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்தால் தமிழகத்தில் அமல்படுத்த தயாராக இருக்கிறோம். பிரச்னைக்குரிய டாஸ்மாக் மதுக்கடைகளை தேர்வு செய்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
