Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 274 பேர் பலி; தொடரும் போர் பதற்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2024
in அரசியல் செய்திகள்
0
Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 274 பேர் பலி; தொடரும் போர் பதற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இஸ்ரேல் மற்றும் ஹாமஸ் இடையே நடந்துவரும் போரில் லெபனானில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பானது, ஹாமஸ் அமைப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தது. இதனால், ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் வாக்கிடாக்கி, பேஜர் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை சைபர் வழி தாக்குதல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் உள்பட 3000 பேர் காயமடைந்தனர். குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டனர்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

இதற்கிடையில், அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மோடி நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி காஸாவின் நிலை குறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்ததுடன், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவையும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயலலாம் எனவும் பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், நேற்று இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், “21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 5,000 பேர் காயமடைந்திருக்கின்றனர். இஸ்ரேல் இலக்காகக் குறிவைத்த கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களை, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தோம். அதனால் அந்தப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன” எனச் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த நகர்வாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதால், லெபனானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி… காசா குறித்துப் பேசியது என்ன?



.

Previous Post

சென்னை-திருவண்ணாமலை, சேலம்-மயிலாடுதுறை MEMU ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – பயணிகள் மகிழ்ச்சி! | Additional coaches are added in five trains including Chennai Tiruvannamalai MEMU

Next Post

Multibagger Stock: ரிலையன்ஸ் பவர் பங்கு: ரூ.1525 கோடி மதிப்பிலான பங்குகளுக்கு முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Multibagger Stock: ரிலையன்ஸ் பவர் பங்கு: ரூ.1525 கோடி மதிப்பிலான பங்குகளுக்கு முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல்

Multibagger Stock: ரிலையன்ஸ் பவர் பங்கு: ரூ.1525 கோடி மதிப்பிலான பங்குகளுக்கு முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In