இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நள்ளிரவு 12 மணிமுதல் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளின் முடிவில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசாநாயக முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன.
