Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமதிக்கும் பரம்பரை அர்ச்சகர்கள்' – நடவடிக்கை கோரும் ராமதாஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2024
in அரசியல் செய்திகள்
0
`அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமதிக்கும் பரம்பரை அர்ச்சகர்கள்' – நடவடிக்கை கோரும் ராமதாஸ்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு 2006-11 ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற திட்டத்தை, 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு நடைமுறைப்படுத்தியது.

கலைஞர் கருணாநிதி – ஸ்டாலின்

இந்த நிலையில், அனைத்து சாதி அர்ச்சகர்களை பரம்பரை அர்ச்சகர்கள் அவமானப்படுத்துவதாகவும், தி.மு.க அரசு அதனை வேடிக்கை பார்ப்பதாகவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியிருக்கிறார்.

இது குறித்து ராமதாஸ் தனது அறிக்கையில், “அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கப் படுவதாகவும், வழிபாடு நடத்துவதற்கு பதிலாக கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டிய அரசு, இந்த அநீதியை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.

அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 பேர் `தங்களை கருவறைக்குள் செல்ல அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் விடுவதில்லை. கோயிலை சுத்தம் செய்யும் பணிதான் வழங்கப்படுகிறது. எந்தக் கோயிலுக்கு அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டோமோ, அதை விடுத்து பக்தர்களே வராத கோயில்களுக்கு அனுப்பப்படுகிறோம். பரம்பரை அர்ச்சகர்கள் எங்களை அவமானப்படுத்துகின்றனர்’ என்று குற்றஞ்சாட்டியதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தால், அவர்களும் பரம்பரை அர்ச்சகர்களுடன் இணைந்து எங்களை அவமானப்படுத்துகின்றனர்.

ராமதாஸ்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் புகார் செய்த போதிலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளால் முடக்கப்பட்டிருந்த இத்திட்டம், வழக்குகள் அனைத்தும் முறியடிக்கப்பட்ட நிலையில், 2021 ஆகஸ்ட் 14-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தத் திட்டம் தந்தை பெரியாரின் கனவு என்றும், இதன்மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டதாகவும் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஆனால், பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு அர்ச்சகர் ஆக்கப்பட்ட இடைநிலை சாதியினருக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுத் தர தமிழக அரசு தவறிவிட்டது. இதுதான் தி.மு.க அரசின் மிகப்பெரிய சமூக அநீதி. தமிழக அரசு நினைத்தால், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள்தான் கருவறையில் அர்ச்சனை செய்வார்கள் என்று அறிவித்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. இதுதொடர்பாக அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் அளிக்கப்பட்ட புகார்கள்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குக் காரணம் பரம்பரை அர்ச்சகர்களைக் கண்டு அரசு அஞ்சுவதுதான்.

ஸ்டாலின்

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை மூடி மறைக்கும் அரசு: இதுவா திராவிட மாடல் சமூகநீதி?#SocialInjustice @CMOTamilnadu pic.twitter.com/YyUaIjDG38

— Dr S RAMADOSS (@drramadoss) September 21, 2024

இப்படிப்பட்டவர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டியதில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து சாதி அர்ச்சகர்கள் அவமானப்படுத்தப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் ஈட்டியைக் குத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு. இதற்கு பரிகாரம் காணும் வகையில், இன்னும் அதிக எண்ணிக்கையில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமித்து அவர்களுக்கு கருவறையில் பூசை செய்யும் அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.





.

Previous Post

திருப்பதி லட்டு விவகாரம்: அண்டை மாநிலங்களிலும் சர்ச்சை? | Kamal Haasan | Modi | MNM Imperfect Show | Tirupati Ladoo Issue Today Imperfect Show

Next Post

Tirupati Laddu: `ஏன் தேசிய அளவில் அச்சத்தைப் பரப்புகிறீர்கள்’ – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி | Why are you spreading apprehensions, prakash raj asks andhra DCM pawan kalyan in tirupati laddu issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tirupati Laddu: `ஏன் தேசிய அளவில் அச்சத்தைப் பரப்புகிறீர்கள்’ – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி | Why are you spreading apprehensions, prakash raj asks andhra DCM pawan kalyan in tirupati laddu issue

Tirupati Laddu: `ஏன் தேசிய அளவில் அச்சத்தைப் பரப்புகிறீர்கள்' - பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி | Why are you spreading apprehensions, prakash raj asks andhra DCM pawan kalyan in tirupati laddu issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In