`இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு’ – லெபனான்
இதுகுறித்து லெபனானின் பிரதமர் நஜிப் மிகாட்டி, “நாட்டின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்” என தெரிவித்துள்ளது. இதேபோல் ஹிஸ்புல்லா அமைப்பு, “பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு. இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் நிச்சயம் கடுமையான தண்டனையைப் பெறுவார்” என தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் கருத்து…
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “ஹிஸ்புல்லா வாங்கிய பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்துவிட்டது” என தெரிவித்துள்ளன. முன்னதாக இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தப்ப பேஜர்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது.
1996-ம் ஆண்டு ஹமாஸ் வெடிகுண்டு நிபுணரான யாஹியா அய்யாஷை இஸ்ரேல் மொபைல் போன் மூலம் படுகொலை செய்தது. அவரது செல்பேசி அவரது இருக்கும் போதே வெடித்து சிதறியது. எனவேதான் பேஜர்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு பேஜர்கள் வெடிப்பு நடந்த அடுத்த நாளே வாக்கி டாக்கி வெடிப்புகள் நடந்தன. இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இது மிகத் தீவிரமான விஜயமாக பார்க்கிறோம். உடனே இதுபோன்ற தாக்குதல்களை நடத்திவிட முடியாது.
இந்தச் சாதனங்கள் அனைத்தையும் வெடிக்கச் செய்ய ஒரு பெரிய திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கை முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
