உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,
”ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கவனத்தை திசை திருப்பும் விவகாரம்.
இது அரசியலமைப்புக்கு எதிரானது.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
இது கூட்டாட்சிக்கு எதிரானது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என கார்கே பதிவிட்டுள்ளார்.
