Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்-ஐ, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகை சம்பாதித்ததாகவும், தமிழக திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் நபர்களுக்கும் அதில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அமீர் முன்னதாக ஆஜராகியிருந்தார்.

ரயில்வேயில் நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஆஸ்திரேலியா – இந்தியா இடையே ஒப்பந்தம்

இந்த நிலையில், இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளார். 302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக், அவருடைய மனைவி மற்றும் சகோதரர், அமீர் உள்ளிட்ட12 பேர் மீதும், ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக பணத்தை கையாண்ட புகாரின்பேரில், இயக்குநர் அமீரை 12-வது நபராக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது.



.

Previous Post

மாஞ்சோலை விவகாரம்: மனித உரிமை மீறல் நடந்துள்ளதா..? தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் விசாரணை..! | National human rights commission enquire about the manjolai labours issues

Next Post

இன்ஸ்டாகிராம் புதிய கண்காணிப்பு அம்சங்களை வெளியிடுகிறது: பெற்றோரின் மேற்பார்வையை அதிகரிக்க, டீன் ஏஜ் தொடர்புகளை கட்டுப்படுத்தவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்ஸ்டாகிராம் புதிய கண்காணிப்பு அம்சங்களை வெளியிடுகிறது: பெற்றோரின் மேற்பார்வையை அதிகரிக்க, டீன் ஏஜ் தொடர்புகளை கட்டுப்படுத்தவும்

இன்ஸ்டாகிராம் புதிய கண்காணிப்பு அம்சங்களை வெளியிடுகிறது: பெற்றோரின் மேற்பார்வையை அதிகரிக்க, டீன் ஏஜ் தொடர்புகளை கட்டுப்படுத்தவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In