Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் 2 பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள்: போப்பாண்டவர் கருத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் 2 பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள்: போப்பாண்டவர் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இரண்டு பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றும், குறைந்த தீங்கு விளைவிப்பவர் ஒருவரை மனசாட்சியுடன் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் குறித்து 87 வயதாகும் போப்பாண்டவர் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சாா்பில் துணை அதிபா் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, சமீபத்தில் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் நடைபெற்றது.

மிகவும் எதிா்ப்பாா்பை ஏற்படுத்திய இந்த விவாதத்தில், பெண்களின் கருக்கலைப்பு உரிமை, பொருளாதாரம், குடியேற்றம், காஸா போா், உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டொனால்ட் டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் தங்களது காரசாரமான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

அந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் கருத்துகளுக்கே அதிகமான ஆதரவுகள் இருந்ததாக ஊடகங்கள் பரவலாகத் தெரிவித்தன. நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பிலும் ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில்,கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இரண்டு பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றும், வாக்காளர்களாகிய நீங்கள் மனசாட்சியுடன் சிந்தித்து குறைந்த தீங்கு விளைவிப்பவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என போப்பாண்டவர் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போப்பாண்டவர் பிரான்ஸிஸ் விமானத்தில் செல்லும்போது செய்தியாளர் ஒருவருக்கு அமெரிக்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது, ” தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இரண்டு பேருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள். ஒருவர் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு எதிரானவர். இன்னொருவர் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் கொள்கை கொண்டவர்.

இருவர்களுடைய கருத்துகளும் பயங்கரமானது, அவர்களுடைய கருத்துகளில் தீமை இருக்கிறது.



.

Previous Post

Thirumavalavan: டெலிட் செய்யப்பட்டு மீண்டும் பதியப்பட்ட வீடியோ; நடந்தது என்ன? – திருமாவளவன் விளக்கம்

Next Post

TOP 10 NEWS: ’உத்ரகண்டில் தமிழர்கள் மீட்பு முதல் திருமாவளவனுக்கு எல்.முருகன் கண்டனம் வரை’ டாப் 10 நியூஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TOP 10 NEWS: ’உத்ரகண்டில் தமிழர்கள் மீட்பு முதல் திருமாவளவனுக்கு எல்.முருகன் கண்டனம் வரை’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’உத்ரகண்டில் தமிழர்கள் மீட்பு முதல் திருமாவளவனுக்கு எல்.முருகன் கண்டனம் வரை’ டாப் 10 நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In