Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Serial Today: `பிரளயத்தை ஏற்படுத்துமா மீனா செல்வம் சந்திப்பு? ; தீபாவை நெருங்கும் கார்த்திக்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2024
in அரசியல் செய்திகள்
0
Serial Today: `பிரளயத்தை ஏற்படுத்துமா  மீனா செல்வம் சந்திப்பு? ; தீபாவை நெருங்கும் கார்த்திக்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிரடி காட்டிய மனோஜ்சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை இந்த வாரம் கலகலப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் திருப்பங்களுடன் நகர்ந்தது. ரோகிணி அம்மாவின் உடல்நிலை, மீனா – ஸ்ருதி அன்பு, ரோகிணிக்கு ஏற்படும் பிரச்னைகள் என கலவையான எமோஷன்ஸை கொடுத்தது. 

நேற்றைய எபிசோடில் முத்துவுக்கே சரியான அட்வைஸ் கொடுத்து மனோஜ் ஸ்கோர் செய்துவிட்டார். 

சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பமானதில் இருந்தே மனோஜ் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கதையில் பலத் திருப்பங்களுக்கு வழிவகுத்தது மனோஜ் தான். சீரியலில் அவ்வபோது சுவாரஸ்யத்தை கூட்டுவதும் மனோஜ் தான். மனோஜாக நடிக்கும் ஸ்ரீ தேவா, கதாபாத்திரத்தை உள்வாங்கி, `ஆர்வக் கோளாறு’ மனோஜை கண் முன் நிறுத்துகிறார். 

ரோகிணியிடம் மனோஜ் ஏமாறும் போதெல்லாம் அவர் மீது அனுதாபம் ஏற்படுகிறது. இம்முறை ரோகிணி மனோஜை ஏமாற்றி பணம் வாங்க முயற்சி செய்கிறார். ஆனால் மனோஜ் மிகவும் கறாராக முடியாது என்று சொல்லிவிட்டார். 

மகன் மற்றும் அம்மாவை சென்னையில் தங்க வைக்க ரோகிணி போராடி வருகிறார். வீட்டு வாடகை 20,000 ரூபாய், அட்வான்ஸ்  1 லட்சம் ரூபாய். ஆனால் ரோகிணி  ஏற்கனவே பண நெருக்கடியில் இருப்பதால் இந்த தொகையை செலுத்த மனோஜிடம் கேட்க நினைக்கிறார். அத்தைக்கு பாக்கெட் மணி, வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பது, மனோஜ் ஏற்படுத்திய நஷ்டத்தை சமாளிப்பது, அம்மாவுக்கு பணம் கொடுப்பது, பிளாக் மெயில் செய்யும் நபருக்கு பணம் கொடுப்பது என ரோகிணிக்கு ஏகப்பட்ட பணத்தேவை. இதனால் இம்முறை மனோஜை ஏமாற்றி காசு வாங்க முடிவு எடுத்துவிட்டார். 

தன் தோழிக்கு பணத் தேவை இருப்பதாக சொல்லி மனோஜிடம் கடன் கேட்கிறார். ஆனால் மனோஜ் சற்றும் யோசிக்காமல் தர முடியாது என்று சொல்லி விடுகிறார். இதனால் ரோகிணி ஆத்திரமடைந்து, `உன் எக்ஸ் கேர்ள் பிரண்டுக்கு மட்டும் பணம் கொடுத்தியே’ என்று கடுமையாக பேச மனோஜுக்கு வருத்தமாகி விடுகிறது. மற்றொருபுறம் மீனா முத்துவின் நண்பருக்கு பணம் கொடுக்க மறுக்கிறார். அண்ணன் தம்பிகள் மாடியில் கூடி பிரச்னைக்ளை பற்றி விவாதிக்க மீனா, ரோகிணி, ஸ்ருதி சமையலறையில் வாக்குவாதம் செய்கின்றனர். முத்துவுக்கு மீனா மீது கோவம், ரோகிணிக்கு மனோஜ் மீது கோவம். இப்படியாக நேற்றைய எபிசோட் முடிந்தது. மீனா செல்வத்தை சந்தித்து பேசுவது போன்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இது பெரிய பிரளயத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சோகமான வாரம்பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமியில் இந்த வாரம் சோகமான வாரம். முழுக்க முழுக்க தாத்தாவின் இறப்பை சுற்றியே கதை நகர்ந்தது. நேற்றைய எபிசோடில் தாத்தா அனைவருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்தது போல காட்டப்படுகிறது. மீண்டும் ஒவ்வொருவராக அழுது தீர்க்கின்றனர். அடுத்த வாரம் கதையில் திருப்பம் ஏற்படும் என்று நம்புவோம்.

தீபாவை பற்றி அறியும் கார்த்திக் கார்த்திகை தீபம்

இந்த வாரம் கார்த்திகை தீபம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்ந்தது. தீபா மலை உச்சியில் இருந்து விழுந்தது, கீதா அறிமுகமானது என கதை விறுவிறுப்பாக செல்கிறது. வீட்டில் இருப்பது தீபா என்று நம்பும் கார்த்திக்கின் அம்மா கார்த்திக் – கீதாவுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். கார்த்திக் கொலை செய்து விட்டு தப்பி வந்த கீதா பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்கிறார். 

மற்றொரு புறம் கார்த்திக் தீவிரமாக தீபாவை தேடி வருகிறார். தீபாவை ஒரு கூலித் தொழிலாளி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கிறார். ஆனால் மருத்துவர்கள் அவரின் உடல் முழுக்க காயங்கள் இருப்பதாக சொல்கின்றனர். கார்த்திக் தீபா விழுந்த அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுகிறார். தீபாவின் புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறார். எப்படியும் இன்றைய எபிசோடில் தீபா உயிருடன் இருக்கும் விஷயம் கார்த்திக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த வாரம் கார்த்திக் – கீதா திருமணம் நடந்துவிட்டால் கதை முற்றிலும் வேறு பாதையில் பயணிக்கும். அப்படி நடந்து விடக்கூடாது என்பதே ரசிகர்களின் ஆசை. 

டிஆர்பி -யில் முன்னேறிய சிறகடிக்க ஆசை

இந்த வாரம் சன் டிவியில் டாப் சீரியல் கயலில் திருமண காட்சிகள் ஒளிபரப்பாகின. கயலின் திருமணம் நீண்டகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்று. ஆனால் எதிர்பாராத விதமாக டிரெண்டிங்கில் கயல் சீரியலை பல சீரியல்கள் முந்திவிட்டது. ஜீ தமிழ் வீரா, பாக்கியலட்சுமி, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை ஆகியவை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. கயல், சுந்தரி, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் 2 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



.

Previous Post

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பெரிய பண்டிகை விற்பனைக்கு முன்னதாக விற்பனையாளர் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுவதால் ஆய்வை எதிர்கொள்ளக்கூடும்-amazon and flipkart may face scrutiny over alleged seller favouritism ahead of big festive sales

Next Post

கோவா செல்ல சரியான நேரம் என்ன – எந்தெந்த இடங்களை எல்லாம் கட்டாயம் சுற்றிப் பார்க்கணும்? | Goa is a perfect blend of sun, sand and parties – when is the right time to visit goa

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவா செல்ல சரியான நேரம் என்ன – எந்தெந்த இடங்களை எல்லாம் கட்டாயம் சுற்றிப் பார்க்கணும்? | Goa is a perfect blend of sun, sand and parties – when is the right time to visit goa

கோவா செல்ல சரியான நேரம் என்ன – எந்தெந்த இடங்களை எல்லாம் கட்டாயம் சுற்றிப் பார்க்கணும்? | Goa is a perfect blend of sun, sand and parties – when is the right time to visit goa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In