இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் அந்த அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் பல கேள்விகளை எழுப்புகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், நீதிபதிகள் பேசும்போது, “2023-ம் ஆண்டு மார்ச் மாதமே சி.பி.ஐ.,-யால் கெஜ்ரிவால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரை சி.பி.ஐ., கைது செய்யவில்லை. ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் மனு நிலுவையிலிருந்த நிலையில், கெஜ்ரிவால் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.

நீதிபதி உஜ்ஜல் பாயன் பேசும்போது, “விசாரித்த 12 மாதங்களுக்குப் பிறகு, அரவிந்த கெஜ்ரிவாலின் பிணை மனுவை மட்டுப்படுத்தவே சி.பி.ஐ அவரைக் கைது செய்திருக்கிறது. மேலும் மத்திய அரசின் “கூண்டு பறவை’தான் சி.பி.ஐ., என்ற மக்களின் பார்வையை சி.பி.ஐ மாற்ற வேண்டும். சி.பி.ஐ., எந்த பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.
