Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`17 நாள்களில் ரூ.7,000 கோடிதான்; ரேவந்த் ரெட்டி 8 நாளில்…' – ஸ்டாலின் பயணத்தை விமர்சித்த ராமதாஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2024
in அரசியல் செய்திகள்
0
`17 நாள்களில் ரூ.7,000 கோடிதான்; ரேவந்த் ரெட்டி 8 நாளில்…' – ஸ்டாலின் பயணத்தை விமர்சித்த ராமதாஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநிலத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு, 17 நாள்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ரூ. 7,616 கோடி முதலீடு அளவுக்கு 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டாலின் இன்று காலை அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார்.

ஸ்டாலின்

இந்த நிலையில், தொழில் முதலீடு ஈர்ப்புக்கான ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் தோல்வி என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தலத்தில் ராமதாஸ், “அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இது மிக மிகக் குறைவு ஆகும். தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகத் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வருபவைதான். அந்த நிறுவனங்கள், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான மையங்களை அமைப்பதற்காகவே முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றன. உலகில் நான்காம் தலைமுறை தொழில்புரட்சி நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய ஆய்வு மையங்கள் அமைக்கப்படுவதும், அதற்காக முதலீடு செய்யப்படுவதும் இயல்பாக நடக்கக் கூடியவை.

ராமதாஸ்

ஒருவேளை இதற்கான முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தகவல்தொழில்நுட்ப அமைச்சரும், செயலாளரும் பேச்சு நடத்திச் சாதித்திருக்கலாம். இதற்காக முதலமைச்சர் தம்மை வருத்திக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கத் தேவையில்லை. தெலங்கானா முதலமைச்சராகக் கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 8 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, ரூ. 31,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். மொத்தம் 19 நிறுவனங்களுடன் தெலங்கானா அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் அந்த மாநிலத்திற்குக் கிடைக்க இருப்பவை தரமான முதலீடுகள் ஆகும்.

அதேபோல், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு புதிதாகப் பொறுப்பேற்ற சித்தராமையா தலைமையிலான அரசின் சார்பில் மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ. 25,000 கோடி முதலீடுகள் ஈர்க்க உறுதி பெற்று வந்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54-ம் மாநாட்டின் போது மகாராஷ்டிரா முதலமைச்சர் ஷிண்டே தலைமையிலான குழு மொத்தம் ரூ. 3.53 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஸ்டாலின்

அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க முதலீடுகள் ஆகும். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பா.ம.க வரவேற்கிறது. அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும்தான். இதைச் செய்தால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தானாகக் குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

அன்னபூர்ணா விவகாரம்: பாயும் வானதி, பதறும் அண்ணாமலை… புகையும் கொங்கு அரசியலின் பின்னணி என்ன?



.

Previous Post

OpenAI இன் o1 ‘ஸ்ட்ராபெரி’ AI மனிதர்களைப் போலவே சிந்திக்க முடியும் – ஆனால் அது ஏன் ஒரு பழத்தின் பெயரிடப்பட்டது?-openais o1 strawberry ai can think like humans but why is it named after a fruit

Next Post

சிறையில் இருந்து வெளியே வந்தார் அரவிந்த் கேஜரிவால்! கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிறையில் இருந்து வெளியே வந்தார் அரவிந்த் கேஜரிவால்! கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு!

சிறையில் இருந்து வெளியே வந்தார் அரவிந்த் கேஜரிவால்! கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In